ETV Bharat / state

புதிய குற்றவியல் சட்டங்கள் விவகாரம்; நீதிமன்றத்தில் நாளை மறுநாள் எந்த வழக்கும் நடக்காதா! வழக்கறிஞர் சங்கத்தின் திட்டம் என்ன? - chennai advocates protest laws - CHENNAI ADVOCATES PROTEST LAWS

Three New Criminal Laws of India: நடைமுறைக்கு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்த கோரி, வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலினுடன் வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பினர்
முதல்வர் ஸ்டாலினுடன் வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பினர் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 4, 2024, 5:09 PM IST

சென்னை: இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சி சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய மூன்று சட்டங்களை ஒன்றிய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டங்களை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர் சங்கங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை, திமுக எம்.பி. வில்சன் தலைமையில் வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பினர் சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று சந்தித்தனர்.

கூட்டமைப்பின் தலைவர் மாரப்பன்: பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் மாரப்பன் கூறியதாவது; ''ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள சட்டங்கள் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். இதற்காக நன்றி தெரிவித்து கொண்டோம். மேலும், தமிழக எம்.பி.க்கள் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முதல்வரிடம் முன்வைத்தோம்'' என்றார்.

தொடர்ந்து பேசியவர், " 'தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை கட்டாயம் எடுக்கும்' என முதல்வர் உறுதி அளித்துள்ளார். நாளை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் முன்பு போராட்டமும், நாளை மறுநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறோம்" என்று மாரப்பன் கூறினார்.

தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பிரபாகரன்: அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பிரபாகரன், ''இந்த மூன்று சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி முதல்வரை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்து, இந்த சட்டங்களில் உள்ள சிக்கல்களை தெரிவித்துள்ளோம். இந்த புதிய சட்ட பிரிவுகளில், குற்றவாளிக்கு ஆலோசனை கூறும் வழக்கறிஞருக்கும் தண்டனை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் பல்வேறு முரணான விஷயங்கள் உள்ளன. இதுதொடர்பாக கூட்டமைப்பினர் அனைத்து மாநில முதல்வரை சந்திக்க திட்டமிட்டுள்ளோம். நிரபராதிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படகூடிய சூழல்களை இந்தச் சட்டம் உருவாக்கும்'' என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன்: நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான வில்சன் கூறும்போது, ''நீதிமன்ற உத்தரவு ஒருபோதும் இந்த சட்டங்களை கட்டுப்படுத்தாது. எவரோ ஒருவர் வழக்கு தொடர்ந்தார், நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு அளித்துவிட்டது என இந்த விவகாரத்தை எடுத்து கொள்ள முடியாது.

வழக்கறிஞர்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் இந்தச் சட்டங்கள் அமல் படுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளை சஸ்பென்ட் செய்து இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இருக்கிற சட்டங்களை எடுத்துவிட்டு, உச்சரிக்க முடியாத மொழியில் சட்டம் இயற்றபட்டுள்ளது. அவசர அவசரமாக இந்த சட்டங்களை கொண்டு வந்து மத்திய அரசு என்ன சாதிக்க போகிறது?'' என்று எம்.பி. வில்சன் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: அமலாக்கத்துறை கைது உத்தரவை ரத்து செய்யக் கோரி ஜாபர் சாதிக் மனுத்தாக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.