ETV Bharat / state

கல்யாண ராணி சத்யாவுக்கு ஜாமின்! நீதிபதி சொன்ன காரணம்! - Kalyanarani sathya bail

பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக தொடரப்பட்ட மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கல்யாணராணி சத்யாவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

kalyana rani sathya
கைதான ராணி சத்யா (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2024, 1:42 PM IST

சென்னை: திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சத்யா ஜாமினில் விடுவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில் 60 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளதாகவும், குற்றப்பத்திரிகை இன்னமும் தாக்கல் செய்யவில்லை என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்து நீதிபதி பி.தனபால், இந்த வழக்கில் காவல்துறை உரிய காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்பதை காரணம் காட்டி சத்யாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த மகேஷ் அரவிந்த் திருமணம் செய்து மோசடி செய்து விட்டதாக அளித்த புகாரின் பேரில் சத்யா கைது செய்யப்பட்டிருந்தார். தாராபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி, மகேஷ் அரவிந்த் திருமணத்துக்காக ஆன்லைன் செயலி மூலமாக பெண் தேடி வந்தார். அப்போது, ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த சத்யா என்ற பெண் அறிமுகமாகி உள்ளார்.

பின்னர் இருவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது மணப்பெண் சத்யாவுக்கு 12 பவுன் தங்க நகைகளை மணமகன் வீட்டர் அணிவித்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு சத்யாவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த கணவர் மகேஷ் அரவிந்த், மனைவி சத்யாவின் செல்போனை எடுத்துப் பார்த்துள்ளார். அப்போது அதில், ஆண்கள் சிலருடன் சத்யா நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் இருந்ததாக தெரிகிறது. இது குறித்து கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 12 ஆண்களை ஏமாற்றிய கல்யாண ராணி சத்யா..!

இந்நிலையில், சத்யா திடீரென வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மகேஷ் அரவிந்த், இது குறித்து தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சத்யா திருமணம் செய்து ஏமற்றிவிட்டதகவும் 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 12 பவுன் நகைகளை மோசடி செய்துவிட்டார். பலபேரை இதுபோல் ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

காவல்துறை விசாரணையில், சத்யாவின் ஏமாற்று வேலையில் மாடு மேய்ப்பவர் முதல் காவல் துறையினர், தொழில் அதிபர் என பலரை திருமணம் செய்து பணம், நகைகளை ஏமாற்றியது தெரியவந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் பதுங்கி இருந்த சத்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.