ETV Bharat / state

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு புறப்பட்ட குட்டி யானை! - பண்ணாரி குட்டி யானை லூட்டி

Erode baby elephant: பண்ணாரி வனப்பகுதியில் தாயை பிரிந்த பெண் குட்டி யானை, ஆசனூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தாயை பிரிந்த குட்டி யானை
தாயை பிரிந்த குட்டி யானை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 6:35 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் நடக்க முடியாமல் இருந்த தாய் யானை ஒன்று மயங்கி விழுந்தது. இந்த தாய் யானைக்கு வனத்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த தாய் யானை உயிரிழந்தது.

இந்த யானைக்கு 3 வயதான ஆண் யானை மற்றும் பிறந்து 2 மாதங்களே ஆன பெண் குட்டி யானை இருந்தன. தாயை பிரிந்து இருந்த ஆண் யானையை, தனது யானைக்கூட்டத்துடன் வனத்துறையினர் சேர்த்தனர். ஆனால், பெண் யானையை, யானை கூட்டத்தோடு சேர்க்க தீவிரமாக முயற்சித்த நிலையில், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

காப்பகத்தில் சேர்ப்பு: இந்நிலையில், ஆசனூர் வனச்சரக அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களாக அந்த பெண் குட்டி யானையை வனத்துறையினர் பராமரித்து வந்த நிலையில், தற்போது இந்த இரண்டு மாத குட்டி யானையை முதுமலை புலிகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முன்னதாக, அந்த பெண் குட்டி யானை வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில், குட்டி யானையைப் பார்த்ததும், அதன் யானைக் கூட்டத்திலிருந்து ஓடி வந்த பெண் யானை, குட்டி யானையை அரவணைத்துக் கொண்டு, தனது கூட்டத்துடன் சென்றது. பின்னர், வனப்பகுதியில் விடப்பட்டிருந்த குட்டி யானை, வனப்பகுதியில் இருந்து வெளியேறி, ஆசனூர் பகுதியில் உள்ள சாலையில் நடமாடியது.

இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆசனூர் வனத்துறையினர், தாயைப் பிரிந்து வாடும் குட்டி யானையை மீட்டு, பாதுகாப்பான இடத்தில் வைத்து பாரமரித்து வந்தனர். மேலும், குட்டி யானையை பராமரிப்பதற்காக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 4 வனத்துறை கால்நடை மருத்துவர்கள் கொண்ட குழுவினர், ஆசனூர் வன அலுவலகத்தில் முகாமிட்டு, குட்டி யானையின் உடல் நலனை கண்காணித்து வந்தனர்.

அந்த முகாமில், அந்த குட்டி யானை வனத்துறை அதிகாரிகளிடம் பாசமாக பழகி வந்தது. இந்நிலையில், இன்று பண்ணாரி வனப்பகுதியில் தாயைப் பிரிந்த பெண் குட்டி யானையை, ஆசனூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஜெய்பூரில் சிக்கிய ஜாஃபர் சாதிக்.. போதைப்பொருள் கடத்தலில் சினிமா பிரபலங்களுக்கும் தொடர்பு.. என்சிபி அளித்த ஷாக் ரிப்போர்ட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.