ETV Bharat / state

3 தலைமுறையாக ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்கும் ஆத்துக்காடு மக்கள்!

Athukkadu Hill People Problems: ஆண்டிப்பட்டி அருகே விவசாய நிலங்களுக்குச் செல்வதற்காக ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து செல்லும் ஆத்துக்காடு மலை கிராம மக்கள், பாலம் அமைத்துத் தருமாறு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Athukkadu Hill People Probelms
ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்கும் மலை கிராமம் மக்கள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2024, 1:28 PM IST

ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்கும் மலை கிராமம் மக்கள்

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தங்கம்மாள்புரம் ஊராட்சியில், ஆத்துக்காடு என்ற மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், இவர்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும்.

விவசாயத்திற்காக ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரையிலான விவசாய நிலங்கள் ஊரின் தெற்கு பகுதியில் ஓடும் மூங்கில் ஆற்றின் மேல் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில், விவசாய நிலங்களுக்கு ஒவ்வொரு முறையும் இவர்கள் சென்று வருவதே வழக்கம். சதுரகிரி மலை அடிவாரத்தில் உள்ள உப்புத்துறை யானைக்கஜம் அருவியில் இருந்து, ஆண்டிற்கு 8 மாதங்கள் வரை தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்லும்.

இந்த நிலையில், அந்த காலங்கள் முழுவதும் மூங்கில் ஆற்றில் தண்ணீர் அதிகளவில் பெருக்கெடுத்து ஓடும். இதனால் மிகுந்த சிரமப்பட்டு, மூங்கில் ஆற்றைக் கடந்து விவசாயப் பணிகளுக்குச் சென்று வரும் ஆத்துக்காடு மலை கிராம மக்கள், பாலம் அமைத்துத் தர வேண்டுமென தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மூங்கில் ஆற்றுக்கு மேல் பகுதியில் இருக்கும் நிலையில், அங்கிருந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை பெற்றோர் தோளில் தூக்கி சுமந்து கொண்டு, ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ள கயிற்றைப் பிடித்து, ஆற்றைக் கடந்து பள்ளிக்கு அனுப்பி வைக்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இக்கிராமத்திற்கு அருகே மூங்கில் ஆற்றில் பொதுப்பணித்துறை மூலம் கட்டப்பட்டிருந்த சேதம் அடைந்த நிலையிலான தடுப்பணையின் பாகங்களைப் பிடித்துக் கொண்டு முதியவர்கள் சிரமப்பட்டு ஆற்றைக் கடந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அவ்வப்போது பெய்த மழை காரணமாக, அந்த தடுப்பணையும் முழுவதுமாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாகவும், இதனால் ஆற்றில் இறங்கி கடந்து செல்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர். ஆத்துக்காடு மலை கிராம மக்கள் தண்ணீர் மிகவும் அதிகமாக செல்லும் காலங்களில், நாள் கணக்கில் அந்த பகுதிகளில் இருந்து மறு பகுதிக்கு கடந்து வர முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுவதாகவும், விவசாய விளைபொருட்களைக் கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே, இந்த மூங்கில் ஆற்றில் பாலம் அமைத்துத் தர வேண்டுமென சுமார் 3 தலைமுறையாக கோரிக்கை விடுத்து வருகின்றனர், இந்த மலை கிராம மக்கள். ஆகையால், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மூங்கில் ஆற்றின் குறிப்பிட்ட பகுதியில், உடனடியாக பாலம் அமைத்துத் தர தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மன வேதனையுடன் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் புதிய 4 வழித்தட உயர்மட்ட சாலை கட்டுமானப்பணியை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.