ETV Bharat / state

'ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைதானவர்களை போலீஸ் காவலில் எடுக்கத் திட்டம்' - போலீசார் தரப்பில் தகவல் - ARMSTRONG MURDER CASE

ARMSTRONG MURDER: சென்னையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை மீண்டும் விசாரணை செய்ய நீதிமன்றத்தில் போலீஸ் காவல் கேட்க உள்ளதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கார்க் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 7, 2024, 7:34 AM IST

ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங் (Credits - BSP TN Unit FB Page)

சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை ஜூன் 5ஆம் தேதி இரவு 8 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த கொலை தொடர்பாக, 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்ட நிலையில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள், பிஎஸ்பி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரேதப் பரிசோதனைக்கு பின்னர், ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அவரது உறவினர்களிடம் சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு ஒப்படைக்கப்பட்டு சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு சென்று சடங்குகள் முடிக்கப்பட்டு, குடும்பத்தார் அஞ்சலிக்காக சிறிது நேரம் வைக்கப்பட்டது. அதன் பிறகு செம்பியம் பகுதியில் உள்ள மாநகராட்சி அரசுப் பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை அயனாவரத்தில் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் ஐபிஎஸ் நேற்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"கொலை நிகழ்ந்த 4 மணி நேரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை மீண்டும் விசாரிக்க போலீஸ் காவல் கேட்க உள்ளோம்.

விசாரணை செய்து சரியான ஆதாரங்கள் அடிப்படையில் தான் சரியான நபர்களை கைது செய்துள்ளோம். முதற்கட்ட விசாரணையில் சட்டப்படி கைது செய்துள்ளோம். சிசிடிவி மட்டுமின்றி ஆதாரங்களும் கைப்பற்றி முறைப்படி கைது செய்துள்ளோம். இதுவரை 7 அரிவாள்கள், 3 பைக்குகள் கைப்பற்றியுள்ளோம்.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை அரசியல் பழிவாங்கல் இல்லை; வேறு சிலர் மீது சந்தேகம் உள்ளது: சந்தீப் ராய் ரத்தோர் தகவல் - armstrong murder case

மேலும் 3 நபர்கள் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகிறோம். ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டதற்க்கு பின்னனியில் ஆம்ஸ்ட்ராங் இருந்ததாக ஆற்காடு சுரேஷ் உறவினர்கள் நினைக்கிறார்கள். இதன் காரணமாக, ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்துள்ளது. அரசியல் அடிப்படையில் கொலை நடந்துள்ளதாக எந்த ஆதாரமும் இல்லை.

தனியார் உணவு டெலிவரி உடை போட்டுவந்தது ஏன்? அங்குள்ள கடைக்கும் கொலைக்கும் தொடர்பு உள்ளதா? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளி இல்லை எனக் கூறுபவர்கள் சரியான ஆதாரத்தை காட்டினால் விசாரிக்க தயாராக உள்ளோம். ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இறுதி சடங்கு செய்வதற்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.

மேலும், ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் அடக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிய மனு மீதான விசாரணை இன்று காலை 08.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆட்டோ டிரைவர் போட்ட ஸ்கெட்ச்.. கச்சிதமா நடந்த படுகொலை.. ஆம்ஸ்ட்ராங் மரணத்தின் பகீர் பின்னணி! - armstrong murder reason

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.