ETV Bharat / state

பணம் சம்பாதிக்க வழிப்பறியில் இறங்கிய ராணுவ வீரர்..! கோவை சம்பவத்தில் பகீர் பின்னணி! - coimbatore highway robbery - COIMBATORE HIGHWAY ROBBERY

coimbatore highway thieves: கோவை அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்தவர்களிடம் கொள்ளை அடிக்க முயன்ற சம்பவத்தில் ராணுவ வீரர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள்
கைதானவர்கள் (Credit - Etv Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 17, 2024, 5:39 PM IST

கோவை: கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அஸ்லாம் சித்திக் (27). இவர் கொச்சியில் விளம்பர நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், அஸ்லாம் சித்திக் கடந்த 13 ஆம் தேதி தனது நண்பர் சார்லஸ் உள்ளிட்ட நான்கு பேருடன் கணினி மற்றும் அதன் உதிரி பாகங்கள் வாங்க பெங்களூருக்கு சென்றள்ளார்.

பின்னர் பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் கோவை வழியாக கேரளா செல்வதற்காக தனது காரில் வந்துள்ளார். அப்போது மதுக்கரை வாளையாறு நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது, திடீரென இரண்டு இனோவா கார்களில் வந்த மர்ம கும்பல் அஸ்லாம் சித்திக் வந்த காரை மறித்து நின்றனர்.

பின்னர் காரின் கண்ணாடியை உடைத்து காரை கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது சுதாரித்துக் கொண்ட அஸ்லாம் சித்திக் உடனடியாக அருகே இருந்த சுங்கச்சாவடிக்கு காரை எடுத்து தப்பிச் சென்றார். அங்கு ரோந்து பணியில் போலீசார் இருப்பதைக் கண்ட மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

இதையடுத்து அஸ்லாம் சித்திக் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் காரை கொள்ளையடிக்க முயன்ற கேரளா மாநிலத்தை சேர்ந்த சிவதாஸ் (29), ரமேஷ்பாபு (27), விஷ்ணு (28), அஜய்குமார் (24) ஆகிய நான்கு பேரை மடக்கிப் பிடித்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சிவதாஸ் மற்றும் அஜய்குமார் இருவரும் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருவதும், விஷ்ணு இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும் விஷ்ணு கடந்த ஏப்ரல் மாதம் சொந்த ஊருக்கு வந்தவர் மீண்டும் பணிக்கு செல்லாததும், கோவை வழியாக வரும் ஹவாலா பணத்தை கொள்ளையடித்தால் யாரும் புகார் அளிக்க மாட்டார்கள் என எண்ணி இந்த சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதனை அடுத்து நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் தப்பி ஓடிய 4 பேரை துணை கண்காணிப்பாளர் முரளி தலைமையில் 3 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

மேலும் தனிப்படை போலீசாரில் சிலர் தப்பியவர்களை தேடி கேரளா சென்றுள்ள நிலையில் ராணுவ வீரர் விஸ்ணு கைது செய்யப்பட்டது குறித்து அவருடைய முகாம் அலுவலகத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கோவையில் சினிமா பாணியில் காரினை வழிமறித்து கொள்ளை முயற்சி! விறுவிறு சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.