ETV Bharat / state

"பிரியாணிக்காக நடந்ததே சேலம் திமுக இளைஞரணி மாநாடு" - அண்ணாமலை விமர்சனம் - அண்ணாமலை பேட்டி

சேலத்தில் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாடு அரசியல் மாநாடு அல்ல; இம்மாநாடு பிரியாணிக்காக நடத்தப்பட்ட மாநாடு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

அண்ணாமலை விமர்சனம்
Annamalai criticized that Salem DMK youth conference
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2024, 1:33 PM IST

மயிலாடுதுறை: "என் மண் என் மக்கள்" யாத்திரையின் ஒருபகுதியாக இன்று (ஜன.24) பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்டார். முதற்கட்டமாக மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் யாத்திரை மேற்கொண்ட அவர், பின்னர் பூம்புகார் சட்டப்பேரவை தொகுதி செம்பனார்கோவிலில் 153வது தொகுதியாக அவர் யாத்திரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அண்ணாமலை, 'இந்தியாவில் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஏன் பிரதமராக வரவேண்டும்..? தமிழகத்தில் 32 மாதங்களாக ஆட்சி செய்து வரும் திமுகவை ஏன் தூக்கி எறிய வேண்டும்.. என்பதை விளக்குவதற்காகவே இந்த யாத்திரையை மேற்கொண்டுள்ளேன். 'சனாதான தர்மத்தை ஒழிப்போம்' என்று பேசிய அறநிலையத்துறை அமைச்சர் அறுபதாம் கல்யாணம் செய்து கொண்டது இந்த பூம்புகார் தொகுதியில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் தான். எப்படி சனாதன தர்மத்தை ஒழிக்கிறார்கள் பாருங்கள்.

மோடி மீண்டும் பிரதமர் ஆவார்: 496 ஆண்டுகளுக்குப் பிறகு 142 கோடி இந்திய மக்களின் சார்பாக குழந்தை ராமரின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் நிறுவியுள்ளார். இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்கள் வேகமான வளர்ச்சியை பெற்று வருகிறது. மோடி தமிழகத்திலும் குடும்ப அரசியல், லஞ்ச லாவண்யம் இல்லாத அரசு அமைய வேண்டும். அதன் சாட்சியாக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி மத்தியில் ஆட்சியில் அமர்வார். கடந்த இரண்டு முறை போன்று இல்லாமல் விதிவிலக்காக தமிழகத்திலும் இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள்.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்பட்ட 'செங்கோல்' மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தால் அனுப்பப்பட்டதாகும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வந்த பட்டண பிரவேச நிகழ்வுக்கு திமுக ஆட்சியில், சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று அதற்கு தடை விதித்தனர். தருமபுரம் ஆதீனத்தில் அந்த பட்டணப்பிரவேசத்தை வெற்றிகரமாக நடத்தி காட்டியது, பாஜக. மயிலாடுதுறை மாவட்டத்தில் பிறந்த கம்பர் ஸ்ரீரங்கத்தில் அமர்ந்துதான் கம்பராமாயணத்தை பாடினார் என்பதை கேட்டறிந்த நரேந்திர மோடி, ஸ்ரீரங்கம் கம்பர் மண்டபத்தில் அமர்ந்து அரை மணி நேரம் கம்பராமாயணத்தை கேட்டார்.

வேங்கை வயல் விவகாரத்தில் நியாயம் இன்னும் கிடைக்கவில்லை: சேலத்தில் திமுக நடத்திய அரசியல் மாநாடு அல்ல. அது ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மேடையில் அமர்ந்து பிரியாணிக்காக நடத்தப்பட்ட மாநாடு. ஆனால் பாஜக அப்படியில்லை அடுத்த தலைவர்களை பாஜக கண்டுபிடித்துக் கொண்டே இருக்கும். தகுதி உடையவர் யார் வேண்டுமானாலும் பாஜகவில் தலைவராக வரலாம்.

திருமாவளவன், வைகோ, கம்யூனிஸ்ட் கட்சியினர் திமுகவின் கொத்தடிமைகளாக மாறி உள்ளனர். திமுக எம்எல்ஏ வீட்டில் தாக்கப்பட்ட பட்டியலின பெண்ணுக்கும், வேங்கை வயலில் குடிநீரில் மனித கழிவு கலக்கப்பட்ட விவாகரத்திலும் இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை.

பட்டியல் இனத்திலிருந்து குடியரசு தலைவர்களை தந்தது பாஜக: ஆனால், பட்டியல் இனத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த்தை குடியரசுத் தலைவராக அமர வைத்தது பாஜக நரேந்திர மோடி அரசு. அதே போல் பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவையும் குடியரசுத் தலைவர் ஆக்கியது, பாஜக அரசு. இதுதான் சமூக நீதி. தமிழ்நாட்டில் உள்ள திமுக அமைச்சர்கள் 39 பேரில் இரண்டு பேர் மட்டுமே பட்டியலினத்தை சேர்ந்தவர்கள்.

ஆனால், மோடி அரசில் 12 பேர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டப்பேரவை நிகழ்வை நேரலையாக ஒளிபரப்புவோம் என்று தேர்தல் அறிக்கையை சொன்னதை தற்போது மறுத்து பேசுகிறார்கள். திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய 511 வாக்குறுதியில் இதுவரை 20-ஐ கூட நிறைவேற்றவில்லை.

இந்திய கூட்டணியில் உள்ள கர்நாடகாவின் காங்கிரஸ் அரசும், தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசும் காவிரியைப் பற்றி எதுவும் பேச மாட்டார்கள். 2024-ல் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள் என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.