ETV Bharat / state

வீடு கட்டும் பணியின்போது மண்ணுக்கு அடியில் கிடைத்த சாமி சிலைகள்! - தொல்லியல் துறையினர் ஆய்வு - THANJAVUR HOUSE SWAMY STATUE - THANJAVUR HOUSE SWAMY STATUE

THANJAVUR BRONZE STATUE RESCUE: கும்பகோணத்தில் உள்ள ஆபீஸர் நகர் பகுதியில் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணியின்போது, நிலத்தில் கிடைத்த சாமி சிலைகளை கைப்பற்றிய வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர், அதனை தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தனர்.

மண்ணுக்கு அடியில் கிடைத்த சிலைகள்
மண்ணுக்கு அடியில் கிடைத்த சிலைகள் (PHOTO CREDITS - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 14, 2024, 10:00 PM IST

தஞ்சாவூர்: கும்பகோணம் அடுத்துள்ள கோயில் தேவராயன்பேட்டை என்னும் ஊரில் உள்ள சிவன் கோயிலுக்கு அருகில் ஆபீஸர் நகர் உள்ளது. அங்கு முகமது பைசல் (43) என்பவருக்கு சொந்தமான காலி இடத்தில் வீடு கட்டுவதற்காக இன்று அஸ்திவாரம் தோண்டப்பட்டது. அதில் முதல் இரு குழிகள் தோண்டப்பட்ட நிலையில், 3வது குழி தோண்டும்போது பல லட்ச ரூபாய் மதிப்பிலான பழங்கால ஐம்பொன் சிலைகள் இருப்பதைக் கண்ட முகமது பைசல் ஆச்சரியத்துடன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் பாபநாசம் வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.

உடனடியாக சம்பவயிடத்திற்கு வந்த வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பழங்கால ஐம்பொன் சிலைகளான அம்பாள், சோமநாதர், பிரதோஷகர், நாயகி, திருஞானசம்பந்தர் உள்ளிட்ட 13 சிலைகள், பீடம் மற்றும் தட்டு உள்ளிட்ட பூஜை பொருள்களும் மண்ணுக்கு அடியில் இருப்பது கண்டு அவற்றைக் கைப்பற்றி மீட்டனர். தொடர்ந்து மேலும் அங்குப் பள்ளங்கள் தோண்டி, வேறு ஏதேனும் சிலைகள் இன்னும் இருக்கின்றனவா எனத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மீட்கப்பட்ட சிலைகளை முழுமையாக தொல்லியல் துறையினர் ஆய்வு செய்த பிறகே இவை எந்த காலத்தைச் சேர்ந்தவை என்பதும், இவற்றின் தற்போதைய மதிப்பு விவரங்களும் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஆட்டோமேட்டிக்கா அபிஷேகம்.. இந்துக்களின் வழிபாட்டிற்காக இஸ்லாமியரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.