திருச்சி: டிடி தமிழ் தொலைக்காட்சியின் பொன்விழாவும், இந்தி மாத நிறைவு விழாவும் சென்னை சிவானந்தா சாலையில் இருக்கக்கூடிய டிடி தமிழ் தொலைக்காட்சியில் (DD Tamil) நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது கவனக்குறைவு காரணமாக ஒரு வரியை தவற விட்டுவிட்டனர். இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையானது. இதற்கு தலைவர்கள் பலர் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலே இருக்காது. எங்கிருந்து வந்தது திராவிடம் என்ற சொல்? திராவிடம் என்றால் என்ன?” என கேள்வி எழுப்பினார்.
“நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இருக்காது”- சீமான்#seeman #AnbilMaheshPoyyamozhi #trichy #eroad #TNGovernment #தமிழ்த்தாய்வாழ்த்து #திராவிடல்நல்திருநாடு #ETVBharatTamilnadu pic.twitter.com/VK6zlSGf5C
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) October 20, 2024
இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளது. இந்நிலையில், இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் நிறுவன விருது வழங்கும் விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இதையும் படிங்க : "நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இருக்காது" - சீமான் பேச்சு!
அப்போது, நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அகற்றி விடுவேன் என சீமான் கூறியது தொடர்பாக கேள்வி கேட்டதற்கு, “அவர் பேசியது வேதனை தரக்கூடியதாக இருக்கிறது. ஒரு தமிழனாக இருந்து கொண்டு அவர் ஏன் இப்படி சொல்கிறார் என்பது. தமிழ் மேல் இருக்கின்ற அவமரியாதையைக் காட்டுவது போல எனக்கு தெரிகிறது.
2023-24ஆம் கல்வியாண்டில் " கனவு ஆசிரியர்" விருது பெற்ற 55 ஆசிரியப் பெருமக்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவுள்ளோம்.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) October 20, 2024
பிரான்ஸ் நாட்டின் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டு, பண்பாடு மற்றும் கலாச்சாரம்… pic.twitter.com/kNI93POZrB
தவெக தலைவர் விஜய் மாநாட்டிற்கு கர்ப்பிணிகள், சிறுவர்கள் வரவேண்டாம் எனக் கூறியது தொடர்பான கேள்விக்கு, அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார். பின்னர், ஆசிரியர் கனவுத் திட்டத்தின் கீழ் 55 ஆசிரியர்கள் மற்றும் ஐந்து அரசு அதிகாரிகளை வெளிநாடு அழைத்து செல்கிறோம்.
பள்ளி ஆசிரியர்களை வெளிநாட்டிற்கு அழைத்து செல்வது சர்வதேச அளவில் இதுவே முதல் முறை. பிரான்ஸ் பாரிஸ் போன்ற நாடுகளில் கல்வி சார்ந்த விஷயங்களை அங்கு தெரிந்து கொள்கின்றனர். ஒவ்வொரு முறையும் பள்ளி மாணவர்களை அழைத்து செல்வோம். இந்த முறை ஆசிரியர்களை அழைத்து செல்வது மகிழ்ச்சியான விஷயம்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்