சென்னை: எய்ட்ஸ் நோய்க்கு மருந்துகளை எடுத்துக்கொள்பவர், சாமனிய மனிதர் ஒருவர் வாழக்கூடிய ஆயுட்காலங்களை தாண்டியும் வாழ முடியும் என விஞ்ஞானி பச்சைமுத்து பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (டிசம்பர் 8) சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், எய்ட்ஸ் நோய் ஆராய்ச்சியாளர்கள் பலர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர். இதில், கலந்துக்கொண்ட 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பலூன்களை பறக்கவிட்டு எய்ட்ஸ் (HIV-எச்.ஐ.வி) விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் விஞ்ஞானி பச்சைமுத்து பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, “முன்பெல்லாம் பாலியல் தொழிலாளர்கள் வளரும் நாடுகளில் எய்ட்ஸ் நோய் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருந்தனர். தற்போது போதை ஊசிகளை பகிர்ந்துகொள்பவர்கள் மூலமாக எய்ட்ஸ் பரவுகிறது.
எய்ட்ஸ் பரவுவதற்கு என்ன காரணம்?
இருபது வருடங்களுக்கு முன்னர் மேல்நாடுகளில் ஆண் தன்பாலின ஈர்ப்பாளர்கள் (Male homosexuals) அதிகம் இருந்தனர். அப்போது இந்தியாவில் இது குறித்து பெரிதளவில் யாருக்கும் தெரியவில்லை.
ஆனால், தற்போது இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் சென்னையில் அதிகமான ஆண் தன்பாலின ஈர்ப்பாளர்கள் உள்ளனர். குறிப்பாக நீலகிரியில் அதிக ஆண் தன்பாலின ஈர்ப்பாளர்கள் உள்ளனர் என்று தரவுகள் அடிப்படையில் கண்டுப்பிடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூலமாக எய்ட்ஸ் நோய் தமிழகத்தில் வேகமாக பரவுகிறது.
இதையும் படிங்க: சொறி சிரங்கு முதல் சிறுநீரக கல் பிரச்சனை வரை..தினமும் 1 செவ்வாழை சாப்பிடுங்கள் போதும்!
முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் 20 வருடங்களுக்கு முன்னர் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மருந்து கிடையாது. மேல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும் ரூ.20 ஆயிரம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருந்தது.
தற்போது, வெறும் 600 ரூபாயில் அதிக பயனளிக்கும் மருந்துகள் கிடைக்கின்றன. தற்போதுள்ள மருந்துகளை எடுத்துக்கொள்வதால், சாமனிய மனிதர் ஒருவர் வாழக்கூடிய ஆயுட்காலம் வரையிலும், அவர்களை தாண்டியும் எய்ட்ஸ் நோயாளிகள் வாழலாம்,” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தன்பாலின ஈர்ப்பாளர்களை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியல் கீழ்வருமாறு காணலாம்:
- கனடா - 2005
- நெதர்லாந்து - 2001
- ஸ்பெயின் - 2005
- நியூசிலாந்து - 2013
- பிரட்டன் - 2014
- ஆஸ்திரேலியா - 2017
- ஜெர்மனி - 2017
- கொலம்பியா - 2016
- அமெரிக்கா
- டென்மார்க்
- பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஆதரிக்கப்படுகிறது.
தன்பாலினச் சேர்க்கைக்கு தடை செய்து அதற்கு எதிராக கடுமையான சட்டங்களை வைத்திருக்கும் நாடுகள் எவை?
- இந்தியா
- ஆப்கானிஸ்தான்
- ஈரான்
- மலேசியா
- மாலத்தீவுகள்
- ஓமன்
- கத்தார்
- சவுதி அரேபியா
- இலங்கை
ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான இசுலாமிய நாடுகளில் தன்பாலினச் சேர்க்கைக்கு கடும் தண்டனைகள் விதிக்கப்படுகிறது. சில நாடுகளில் இதற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும் போராட்டங்கள் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.