ETV Bharat / state

ராகுலை திடீரென புகழ்ந்து தள்ளிய செல்லூர் ராஜு; அரசியல் தீயைப் பற்ற வைத்த அதிமுக! - RAHUL GANDHI - RAHUL GANDHI

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் அரங்கில் பேசுபொருளாகி உள்ளது.

செல்லூர் ராஜு மற்றும் ராகுல் காந்தி
செல்லூர் ராஜு மற்றும் ராகுல் காந்தி (Photo Credits - Etv Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 21, 2024, 2:23 PM IST

சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, வாக்குப்பதிவு நடைபெறவுள்ள தொகுதிகளில் பொது இடங்களுக்குச் சென்று சாமானிய மக்களுடன் கலந்துரையாடுவது, அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வது என்று, தம்மை எளிய மக்களின் பிரதிநிதியாக அடையாளப்படுத்தி கொள்ள முயற்சித்து வருகிறார்.

அண்மையில் கூட, ஐந்தாம் கட்ட தேர்தலையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது, ஒரு சலூன் கடைக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்கு முகச்சவரம் (ஷேவிங்) செய்து கொண்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலானது. அதேபோன்று தற்போது உணவகம் ஒன்றுக்கு சென்றுள்ள அவர், அங்கு உணவருந்தியபடி ஹோட்டல் நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவதுடன் அங்குள்ள வாடிக்கையாளர்களுடன் செல்ஃபியும் எடுத்து கொண்டுள்ளார்.

இந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது தான் தமிழக மற்றும் தேசிய அரசியலில் தற்போது பேசுபொருளாகி உள்ளது. 'நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் !!!' என்று தமது பதிவில் குறிப்பிட்டு, ராகுல் காந்திக்கு செல்லூர் ராஜு புகழாரம் சூட்டியுள்ளதும் அரசியல் அரங்கில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது ஏழு கட்டங்களாக நடைபெற்றுவரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு முன், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியே வந்த அதிமுக, இத்தேர்தலில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தனியாக களம் காண்கிறது.

அதேசமயம் தமிழ்நாட்டை பொறுத்தவரை காங்கிரஸ், திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இந்த நிலையில் அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு, ராகுல் காந்தியை புகழ்ந்து பேசியுள்ளது அரசியல் சார்ந்த பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

இதையும் படிங்க: நாட்டின் அடுத்த பிரதமரை கணித்ததா நந்தி அவதாரம்? - கோவை சிறப்பு பூஜையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.