ETV Bharat / state

மோடியின் வருகையைத் தொடர்ந்து குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்! - Kanyakumari

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 2, 2024, 2:58 PM IST

Kanniyakumari Tourists: பிரதமர் மோடி கன்னியாகுமரியில் இருந்து டெல்லி திரும்பிய நிலையில், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கன்னியாகுமரியில் அலைமோதுகிறது.

கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் (Credit - ETVBharat Tamil Nadu)

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கோடை விடுமுறை காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும். ஆனால், இந்த ஆண்டு கோடை விடுமுறை துவங்கும் நேரத்தில் அதிகமான வெயில் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வர முடியாத நிலை ஏற்பட்டது.

அதன் பின்னர், அதிக காற்று மற்றும் மழை காரணமாக சுற்றுலாப் பயணிகள் வராததால் கலை இழந்து காணப்பட்டது. மழை முடிந்து சுற்றுலாப் பயணிகள் குமரிக்கு வரத் தொடங்கியபோது, பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு ஆன்மீக பயணமாக வந்தார்.

இதனால் கடந்த 3 நாட்களாக சுற்றுலாப் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், அவர்களது வருகையும் குறைவாக காணப்பட்டது. இந்நிலையில், மூன்று நாள் தியானத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பிய பின்னர் நேற்று மாலை சுற்றுலாப் பயணிகளுக்கு இருந்த கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டது.

இதன் காரணமாக, இன்று காலை சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் அதிக அளவில் கன்னியாகுமரியில் குவிந்தனர். முக்கடல் சங்கமத்தில் சன் வியூ பாய்ண்ட் (Sun View Point Kanyakumari) பகுதியில் அமர்ந்து சூரிய உதயத்தை கண்டுகளித்தனர். அவர்கள் கடல் அழகையும், சூரிய உதயத்தையும் பார்த்து ரசித்தனர். மேகமூட்டம் காரணமாக, சூரிய உதயம் கடலில் இருந்து மேலே எழும்பியதைப் பார்க்க முடியாத சூழல் நிலவியது.

பின்னர், சூரியன் தாமதமாக மேலே எழும்பிய பின் தெரிந்த சூரிய உதயத்தை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். சுற்றுலாப் பயணிகள் கடலில் குளித்தும், கால்களை நினைத்தும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும், காந்தி மண்டபம், காமராஜர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறைக்குச் செல்ல படகுத் துறை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

இதையும் படிங்க: இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா: 'இந்தியன் என்ற எனது அடையாளத்தை யாராவது பிரிக்க நினைத்தால்..!' - கமல்ஹாசன் - Indian 2 Audio Launch

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.