ETV Bharat / state

கல்பாக்கம் ஈனுலையில் விரைவில் மின் உற்பத்தி! மத்திய அரசு போடும் கணக்கு என்ன? - kalpakkam atomic energy plant

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 31, 2024, 6:49 PM IST

கல்பாக்கம் அணு மின்நிலைய வளாகத்தில் அமைந்துள்ள ஈனுலையை கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி ஆய்வு செய்த நிலையில், தற்போது 500 மெகா வாட் உற்பத்திக்கான எரிபொருள் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
PM Modi witnessed the core loading initiation of the 500 MW Prototype Fast Breeder Reactor (Photo Credit: ETV Bharat)

கல்பாக்கம்: சென்னை அடுத்த கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ள 500 மெகா வாட் ப்ரோட்டோடைப் எனப்படும் அணுமூல முன்மாதிரி அதிவேக ஈனுலையில் எரிபொருள் நிரப்ப அணுசக்தி கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மேலும், ஈனுலையில் மின் உற்பத்தி தொடங்க தேவையான பணிகளை மேற்கொள்ளவும் அணுசக்தி கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள அணுமூல முன்மாதிரி அதிவேக ஈனுலையை ஆய்வு செய்த அதிகாரிகள் இந்த அனுமதியினை வழங்கி உள்ளனர். புளுடோனியத்தை அணுஎரிபொருளாக மாற்றும் திட்டத்தின் கீழ் ஈனுலையில் 500 மெகா வாட் மின் உற்பத்திக்கான எரிபொருளை நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

எரிபொருள் நிரப்புவது மற்றும் மின் உற்பத்திக்கான பணிகளை தொடங்குவது என மூன்று கட்டங்களாக பணிகளை மேற்கொள்ள அணுசக்தி கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் அனுமதித்து உள்ளனர். அதிவேக ஈனுலையில் எரிபொருள் நிரப்புவதை தொடர்ந்து மீதமுள்ள பணிகளை அடுத்தடுத்த கட்டங்களாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி கல்பாக்கம் அணுமின் நிலையம் வந்த பிரதமர் மோடிம் ஈனுலையின் பாஸ்ட் பிரீடர் ரியாக்டரில் (Fast Breeder Reactor) 500 மெகாவாட் அளவிலான கோர் லோடிங் எரிபொருள் நிரப்பப்படுவதை பார்வையிட்டார். திரவ சோடியத்தை குளிர்வித்து அதன் மூலம் மின் உற்பத்திக்கான பணிகள் நடைபெறும் நிலையில், பாதுகாப்பு காரணங்களாக பல்வேறு கட்டங்களாக மூலக்கூறுகள் நிரப்பும் பணி நடைபெற்றது.

இதையும் படிங்க: கல்பாக்கத்தில் ஈனுலை.. பிரதமர் மோடி விழாவை முதல்வர் புறக்கணித்தது ஏன்.. அறிவியலா? அரசியலா?

கோர் லோடிங் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கிய நிலையில், விரைவில் முழுமையாக நிரப்பப்பட்டதும் ஈனுலையில் அணு பிளவை பிரிக்கும் பணிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணுசக்தி கட்டுப்பாட்டு ஆணையத்தின் அனுமதியால் 500 மெகா வாட் ப்ரோட்டோடைப் அணுமூல முன்மாதிரி அதிவேக ஈனுலையில் எரிபொருள் நிரப்புவதற்கான பணிகள் வேகமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நாட்டின் அணுசக்தி துறையில் இது குறிப்பிடத்தக்க வகையிலான மைல்கல் என சொல்லப்படுகிறது. மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரதிய நபிகியா வித்யுத் நிகாம் லிமிடெட் எனப்படும் பாவினி நிறுவனம் கல்பாக்கம் அணுஉலை வளாகத்தில் 500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மாதிரி அதிவேக ஈனுலையைக் நிறுவி உள்ளது.

மேலும், திரவ சோடியத்தைக் குளிர்விக்கும் வகையில் நாட்டிலேயே அமைக்கப்பட்டுள்ள முதல் ஈனுலை இது என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், கல்பாக்கம் ஈனுலையில் சோடியத்தை குளிர்வித்து அதில் இருந்து அனு பிளவுகளை பிரிக்கும் பணிகளுக்கு சுற்றுவட்டார மக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "கல்பாக்கத்தில் ஏற்கெனவே இயங்கும் சோதனை ஈனுலை" - அணு விஞ்ஞானி அளிக்கும் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.