ETV Bharat / state

விபத்தில் உயிரிழந்த ரசிகரின் உருவப்படத்திற்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா! - நடிகர் சூர்யா

Actor Suriya: நடிகர் சூர்யா நற்பணி மன்றத்தின் விழுப்புரம் மாவட்டம் தலைவர் மணிகண்டன் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், இன்று (பிப்.12) நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 4:58 PM IST

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அடுத்த முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளராக வேலை செய்து வந்தவர் மணிகண்டன். இவர் நடிகர் சூர்யாவின் நற்பணி மன்றத்தின் விழுப்புரம் மாவட்ட தலைவர் ஆவார். இந்த நிலையில் மணிகண்டன் கடந்த 7ஆம் தேதி அன்று சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இந்த செய்தியை அறிந்ததுமே நடிகர் சூர்யா மணிகண்டனின் குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று (பிப்.12) நடிகர் சூர்யா நேரடியாக விழுப்புரத்தில் உள்ள மணிகண்டனின் இல்லத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதோடு அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். மேலும், இந்த நிகழ்வில் சூர்யா ரசிகர் மன்றத்தின் கௌரவ தலைவர் ராஜசேகர பாண்டியன், அகில இந்திய தலைவர் பரமு, செயல் தலைவர் ஆர்.ஏ ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தமிழக அரசின் உரை புறக்கணிப்பா..? ஆளுநர் மாளிகையின் விளக்கம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.