கோயம்புத்தூர்: நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் வரும் ஜூலை 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ரஞ்சித் மற்றும் படக் குழுவினர் கோயம்புத்தூர் கோனியம்மன் திருக்கோயிலில் திரைப்படத்தின் போஸ்டரை வைத்து சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கவுண்டம்பாளையம் திரைப்படம் வருகிற ஜூலை 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. சுமார் 200 திரையரங்குகளில் படம் திரையிடப்பட உள்ளது. நாடகக் காதலை மையப்படுத்தி விழிப்புணர்வு படமாக தான் இயக்கியும், நடித்தும் உள்ளேன். கோவை பகுதியைச் சுற்றி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
நாடகக் காதலில் பாதிக்கப்பட்ட குடும்ப பெண்களின் கண்ணீரை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளது. பணக்கார பிள்ளைகளைக் குறிவைத்து திருமணம் செய்வது தான் படத்தின் மைய கரு. இன்றைய காலகட்டத்தில் வரதட்சணை, கொலை, தற்கொலை போன்றவை நடைபெற்று வருகிறது. மேலும், சுயமரியாதை திருமணம் என சொல்லி எவ்வளவு கொடுமை திருநெல்வேலி நடந்துள்ளது என சுட்டிக்காட்டினார்.
சுயமரியாதை திருமணங்களை நிறுத்த வேண்டும். சமூக நீதி பேசினால் எனக்கு கடும் கோபம் வரும். மேலும் சுயமரியாதை , சமூக நீதி பேசுபவர்கள் முதலில் அவர்களின் குடும்பத்தில் இருக்கும் பெண்ணிற்கு சுயமரியாதை திருமணம் செய்து வைத்துவிட்டு மற்ற பெண்களுக்கு பண்ண சொல்லுங்க. ஆனால், அவர்கள் அதை பண்ண மாட்டார்கள்.
பெற்றோர் இல்லாமல் திருமணம் நடக்கக் கூடாது அப்படி சட்டம் கொண்டு வர வேண்டும். பெற்றவர்கள் தான் உயர்ந்த சாதி பெற்றவர்களைப் பிரித்து கல்யாணம் நடத்தி வைப்பதற்கு பதில் அவர்களுடன் சேர்த்து வைத்து அவர்களின் சம்மதத்துடன் நடத்தி வைக்கலாமே என ஆலோசனை வழங்கினார். நாடகக் காதல் என்று சொல்லும் போது மட்டும் என்னை சாதி வெறியனாக பார்க்கிறார்கள். நாடகக் காதலை எதிர்ப்பதால், நான் சாதி வெறியன் என்றால் ஆம் நான் சாதி வெறியன் தான்.
படத்தில் இடம்பெற்றுள்ள மாட்டிறைச்சி வசனம் குறித்த கேள்விக்கு நாய், பன்றி, காக்கா, பொங்கல் உள்ளதா??? மாடுகள் தெய்வமாகவும், விவசாயத்திற்குக் காலம் காலமாக பக்கபலமாக உள்ளது என்பதில் தான் மாட்டுப்பொங்கலுக்கு அரசு விடுமுறை அளித்துக் கொண்டாடுகிறோம் எனவே மாட்டை தெய்வமாக வழிபடுவதால் அது தொடர்பான வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறினார்.
இதேபோல் என் படத்தின் மீது யாருக்கெல்லாம் கோபம் வருகிறதோ, அவர்களும் நாடகக் காதலை ஆதரிப்பவர்கள் தனக்கு அரசியல் கட்சி ஆரம்பிக்க திட்டமில்லை, சேரவும் திட்டமில்லை. கள்ளச்சாராயம் விற்பவர்கள் தனக்கான இருக்கையைப் பிடித்து சட்டமன்றத்தில் அமர்ந்துள்ளனர். கடன் வாங்கி நடத்தும் ஆட்சி நல்ல ஆட்சியா??. நாளைய தலைமுறையை காப்பாற்ற அரசியல் மாற்றம் வேண்டும் என வலியுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாக வைத்து தான் அரசியல் கட்சியினர் போட்டி போட்டு பணம் கொடுக்கின்றனர். விவசாய தற்கொலைகளுக்கு ஏன் அரசு நிவாரணம் கொடுக்கவில்லை? சாலைகளில் திரும்பும் இடங்களில் எல்லாம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை.
கள்ளச்சாராயத்தை ஆட்சியாளர்களால் ஒழிக்க முடியாது. பிளாஸ்டிக்கையே இவர்களால் ஒழிக்க முடியாத போது எப்படி கள்ளச்சாராயத்தை ஒழிப்பார்கள்? அரசியல் மிகப்பெரிய வியாபாரம். எனவே, அதில் அரசியல் கடைகள் (கட்சி) உள்ளது புதிய கடைகளும் (கட்சி) திறக்கப்படவுள்ளது.
நல்ல அரசியல் கட்சி வர வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது. தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவோம் என்பது ஏற்றுக் கொள்ள இயலாது. ஒரே முயற்சியாக மது விலக்கை கொண்டு வர வேண்டும் கள்ளுக்கடையை திறக்க வேண்டும் கள்ளுக்கடையில் வருமானம் இல்லாத காரணத்தினால் தான் இவர்கள் விரும்புவதில்லை.
மதுவில் வரும் வருமானத்தில்தான் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது. 200 திரையரங்குகளில் படம் வெளியாகிறது. கவுண்டம்பாளையம் படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. அதற்காக இந்த படத்தில் ஆபாச காட்சிகள் இருப்பதாக நினைக்க வேண்டாம். நாடகக் காதல் குறித்த ஆழ்ந்த கருத்துகள் இருப்பதால் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜய் பிறந்தநாள்: தெறிக்கும் தீப்பொறி..! ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த 'கோட்' படக்குழு - Vijay GOAT update