ETV Bharat / state

"ஜூன் 4-க்குப் பிறகு கட்சி வளரும்" - ஏ.சி.சண்முகம் நம்பிக்கை! - A C Shanmugam - A C SHANMUGAM

A.C.Shanmugam: வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஏ.சி.சண்முகம் புகைப்படம்
ஏ.சி.சண்முகம் புகைப்படம் (Credit: ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 4, 2024, 9:16 PM IST

ஏ.சி.சண்முகம் பேட்டி (Credit: ETV Bharat Tamilnadu)

வேலூர்: வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவரும், பாஜக கூட்டணியின் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் பாஜக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஏ.சி.சண்முகம், இன்று (மே 4) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில், கூட்டணியின் 9 கட்சி நி்ரவாகிகளிடம் தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்தேன்.

சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன் என்று கூட்டணி கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தாமரை சின்னம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். இந்த வெற்றியை பிரதமராக பொறுப்பேற்கும் நரேந்திர மோடியிடம் சமர்ப்பிப்பேன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 15 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறும். அகில இந்திய அளவில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, பாலாம்பட்டு என மூன்று பஞ்சாயத்துகளில் எங்கள் ஏஜென்டுகளை அனுமதிக்கவில்லை. இதுதொடர்பாக அப்போதே மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் பார்வையாளர் ஆகியோரிடம் புகார் தெரிவித்தோம்.

அந்த மூன்று பஞ்சாயத்துகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று எழுத்துப்பூர்வமாக கேட்டிருக்கிறோம். எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்வோம். அதேபோல் ஜனாதிபதி, மத்திய தேர்தல் ஆணையம், மாநிலத் தேர்தல் ஆணையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மூன்று பஞ்சாயத்துக்களில் உள்ள 8 பூத்களில் பாஜக கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளே இல்லை. இப்போதைக்கு நீதிமன்றம் போக முடியாது. தேர்தல் நடவடிக்கைகள் முடிந்தால்தான் வழக்கு போட முடியும். புதிய நீதிக்கட்சியைப் பொறுத்தவரை, ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு கட்சி வளர்ந்துவிடும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "கட்டிட வேலை செய்பவர்களுக்கா வீடு சொந்தம்?" - இளையராஜாவை சாடிய தயாரிப்பாளர் கே.ராஜன்! - K RAJAN ABOUT ILAYARAJA

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.