ETV Bharat / state

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 19 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்! - fishermen rescued from sri lanka

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2024, 3:41 PM IST

கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி இலங்கை கடல் படையினரால் கைது செய்யபட்டு, செப்.6ஆம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 19 மீனவர்கள் இன்று விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

சென்னை விமான நிலையம் வந்தடைந்த மீனவர்கள்
சென்னை விமான நிலையம் வந்தடைந்த மீனவர்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி விசைப்படகுகளில் கடலுக்குச் சென்று மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, அதிகாலை நேரத்தில் இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலில் வந்து நாகப்பட்டினம், ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகுகள் மற்றும் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள், மீன்பிடி வலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அதோடு, மீனவர்கள் 19 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்கள் மீது 'எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக' குற்றம் சாட்டி இலங்கைக்கு அழைத்துச் சென்று இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் பொய்யான குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர் என்று தமிழக மீனவர்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம் எழுதி, கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனே விடுவிப்பதோடு, அவர்கள் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: மீன் விரும்பி உண்பவரா நீங்க? அப்போ உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கை!

இதையடுத்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் அடிப்படையில், செப்.6ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 19 பேரையும் விடுவித்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்திய தூதரக அதிகாரிகள் மீனவர்களை தங்கள் பராமரிப்பில் வைத்துக் கொண்டதோடு, அவர்களுக்கு எமர்ஜென்சி சர்டிபிகேட் வழங்கி விமானம் மூலம் இலங்கையில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகளைச் செய்தனர்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் தமிழக மீனவர்கள் 19 பேரும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்த மீனவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.