ETV Bharat / state

மடிப்பாக்கம் சிலிண்டர் விபத்து: இளம்பெண் லின்சி உயிரிழந்த சோகம் - MADIPAKKAM CYLINDER BLAST

மடிப்பாக்கத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த லின்சி பிளஸினா
உயிரிழந்த லின்சி பிளஸினா (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2024, 4:49 PM IST

சென்னை: மடிப்பாக்கம் குபேரன் நகரில் உள்ள வீட்டின் முதல் மாடியில் வாடகைக்கு வசித்து வந்தவர் லின்சி பிளஸினா (26). இவர் நங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், இவரது வீட்டில் சமையல் கேஸ் தீர்ந்துள்ளது. இதனால், லின்சி தன்னுடன் வேலை பார்க்கும் கௌரிவாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் (30) என்பவரிடம் சிலிண்டர் கேட்டுள்ளார். அதன் பேரில் கடந்த 7 ஆம் தேதி இரவு மணிகண்டன் அவரது வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரை கொண்டு வந்து, லின்சி வீட்டில் பொருத்தியுள்ளார். அதனை அடுத்து கேஸ் அடுப்பை பற்ற வைத்தபோது கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'கொள்ளையிலும் பொண்டாட்டி பாலிசி'.. தாம்பரம் 50 சவரன் நகை திருட்டு சம்பவத்தில் தம்பதி கொடுத்த ஷாக்!

இதனால், மளமளவென தீ பற்றி லின்சியின் 2 கைகள், மார்பு, கால் தொடை என பல பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது உடனிருந்த மணிகண்டனுக்கு இரு கைகள், முதுகு என 45 சதவீதம் தீக் காயம் ஏற்பட்டது. இந்நிலையில், இருவரது அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த லின்சி பிளசினா இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.