ETV Bharat / state

திருச்செந்தூரில் நடிகை ரோஜா செய்த செயலால் கொந்தளித்த நெட்டிசன்கள்.. வைரலாகும் வீடியோ! - Actress Roja Viral Video

Actress Roja: திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்ய வந்த நடிகை ரோஜாவுடன் புகைப்படம் எடுக்க வந்த கோயில் பெண் தூய்மைப் பணியாளர்களை கையை காண்பித்து தள்ளி நிற்கச் சொன்ன வீடியோ காட்சி வெளியாகி நெட்டிசன்களிடையெ கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் தூய்மை பணியாளர்களை தள்ளி நிற்கச் சொன்ன ரோஜா
பெண் தூய்மைப் பணியாளர்களை தள்ளி நிற்கச் சொன்ன ரோஜா (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 16, 2024, 6:40 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயிலில் வருடந்தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். அதன் அடிப்படையில், ஒவ்வொரு வருடத்திலும் இருமுறை வருஷாபிஷேகம் நடைபெறும்.

அந்த வகையில், மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தை மாதத்தில் தை உத்தர வருஷாபிஷேகமும், அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற ஆனி உத்திர தினத்தன்று ஆனி உத்தர வருஷாபிஷேகம் நடைபெறும். இதன்படி, அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற ஆனி உத்தர நாளான நேற்று (ஜூலை 15) ஆனி உத்திர வருஷாபிஷேகம் நடைபெற்றது.

ஆனி உத்தர வருசாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று (ஜூலை 15) அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், கோயில் கும்பங்களுக்கு பூஜைகளும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமானத்திற்கு கொண்டுவரப்பட்டு, விமான கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதுமட்டுமல்லாது, ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா, அவரது கணவரான இயக்குநர் ஆர்.கே.செல்வமணியுடன் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வரும்போது அங்கிருந்த பக்தர்கள், கோயில் பணியாளர்கள் என ஏராளமானோர் ரோஜாவிடம் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அப்போது கோயிலில் பணிபுரிந்து கொண்டிருந்த பெண் தூய்மைப் பணியாளர்கள் இருவர், மிகுந்த ஆர்வமுடன் நடிகை ரோஜாவுடன் புகைப்படம் எடுக்க விரும்பி, ரோஜாவின் மிக அருகில் வந்து நெருங்கி நிற்க முயன்றுள்ளனர். இந்த நிலையில், ரோஜா அந்த தூய்மைப் பணியாளர்களை சற்றுத் தள்ளி நிற்குமாறு சைகையில் கைகாட்டியுள்ளார். இதனால் சற்று தள்ளி நின்றபடியே தூய்மைப் பணியாளர்கள் ரோஜாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள், ரோஜாவின் செயலை மிகுந்த ஆவேசத்துடன் கேள்வியெழுப்பியுள்ளதோடு, இது குறித்து ரோஜா விளக்கமளிக்க வேண்டும் என்றும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விடாமல் விரட்டிய சிபிசிஐடி.. எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைதான கதையும், வழக்கு பின்னணியும்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.