ETV Bharat / state

ஆந்திராவில் இருந்து நெல் ஏற்றி வந்த லாரி மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து! - Truck Overturns - TRUCK OVERTURNS

Truck Overturns : வேலூர் மாவட்டம், பத்தலப்பல்லி மலைப்பாதையின் மூன்றாவது வளைவில் ஆந்திராவில் இருந்து நெல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் மற்றும் கிளீனருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

விபத்துக்குள்ளான லாரி
விபத்துக்குள்ளான லாரி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2024, 10:03 PM IST

வேலூர்: வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி மலைப்பாதையின் மூன்றாவது வளைவில் ஆந்திராவில் இருந்து வேலூருக்கு நெல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் ரஃபிக் மற்றும் கிளீனர் சீனு இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

இந்த தகவல் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இத்தகவலறிந்து வந்த பேரணாம்பட்டு போலீசார் மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : யானைகள் வழித்தடத்தில் உள்ள ரிசார்ட்களை இடிக்கும் அரசின் நடவடிக்கை; சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - resorts on elephants routes issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.