தூத்துக்குடி : தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பு 31 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப் 10ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
அந்தவகையில், இன்று(செப் 10) தேர்தலில் கொடுத்து வாக்குறுதியின் படி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டினை கலைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும், எண்ணும், எழுத்தும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவில் உள்ள ஆசிரியர்கள் (டிட்டோஜாக்) தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க : "ஆசிரியர்களை போராட்டத்தில் பங்கேற்க வற்புறுத்தினால் நடவடிக்கை" - தொடக்கக் கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை! - TN Teachers Protest
அதன் ஒரு பகுதியாக, கோவில்பட்டி, கயத்தார், புதூர், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய ஐந்து யூனியனில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஈடுபட்டுள்ளனர். இதனால் மாணவர்கள் மட்டும் வகுப்பறையில் அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில், கோவில்பட்டி புது ரோட்டில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, 2ம் வகுப்பு மாணவி ஒருவர் வகுப்பறையில் சக மாணவர்களுக்கு ஆசிரியர் ரேஞ்சுக்கு பாடம் எடுத்து அசத்தியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்