ETV Bharat / state

மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் நல வாரியம் உருவாக்க சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்! - medical students welfare board

Welfare board for doctors and medical students: மருத்துவ மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் புகார்களை தீர்த்திட தேசிய, மாநில மற்றும் கல்வி நிறுவன அளவிளான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் நல வாரியம் என்ற‌ அமைப்பை உருவாக்கிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்
டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 19, 2024, 5:42 PM IST

சென்னை: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது, "கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூர நிகழ்வுக்கு, மேற்கு வங்க மாநில அரசின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவிகளுக்கு பாதுகாப்பான ஓய்வு அறைகள் மற்றும் பாதுகாப்பை வழங்காத, 36 மணி நேரம் தொடர்ச்சியான பணி வழங்கிய மேற்கு வங்க அரசே முதல் காரணமாகும்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளில் உள்ள கட்டமைப்பு குறைபாடுகளை பற்றி கவலைப்படாத, ஆய்வுகளை மேற்கொண்டு குறைபாடுகளை சரிசெய்யாத, மாணவர்களின் பாதுகாப்பு பற்றி கவலைப்படாத, மாணவிகளுக்கு ஓய்வு அறைகள் கூட இல்லாததைக் கண்டறியாத, உழைப்புச் சுரண்டலை ஊக்குவிக்கும் ஊழல் மிகுந்த தேசிய மருத்துவ ஆணையமும் (NMC), மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையும் இரண்டாவது காரணமாகும்.

எனவே, மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட இக்கொடுமைக்கு மேற்கு வங்க அரசு, மத்திய அரசு மற்றும் NMC ஆகியவை பொறுப்பேற்க வேண்டும். மேலும், மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நட்டா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவரும், அதன் அனைத்து போர்டுகளின் தலைவர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும்.

ஊழல் மிகுந்த தேசிய மருத்துவ ஆணையத்தின் கட்டமைப்பை மாற்றி, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், மாநில மருத்துவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ளடங்கிய ஜனநாயக அமைப்பாக மாற்ற வேண்டும். முதுநிலை மருத்துவ மாணவியின் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு சட்ட ரீதியாக கடும் தண்டனையை பெற்றுத் தருவதை உறுதி செய்ய வேண்டும்.

கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு மத்திய மற்றும் மேற்கு வங்க மாநில அரசு ரூ.1 கோடிக்கும் குறைவில்லாத இழப்பீட்டை வழங்கிட வேண்டும். மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, மருத்துவ மாணாக்கர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் புகார்களை தீர்த்திட தேசிய, மாநில மற்றும் கல்வி நிறுவன அளவிலான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் நல வாரியம் என்ற‌ அமைப்பை உருவாக்கிட வேண்டும்.

மேலும், அனைத்து துறைகளிலும் பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் அனைத்து பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசும், மாநில அரசுகளும் எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஆற்காடு சுரேஷின் மனைவிக்கு செப்.2 வரை நீதிமன்றக் காவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.