சென்னை: ஆவடி, சரஸ்வதி நகர் குறிஞ்சி தெருவில் அமைந்துள்ள பாதாள சாக்கடையை சீர் செய்யும் பணியில் ஆவடி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் நான்கு பேர் ஈடுபட்டிருந்தனர். அதில், ஆவடி அருந்ததிபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (25) பாதாள சாக்கடைக்குள் இறங்கி உள்ளார். அப்போது அவரை விஷவாயு தாக்கியதில் அவர் பாதாள சாக்கடை உள்ளேயே மயங்கி விழுந்துள்ளார். இதனையறிந்த சக ஊழியர்கள் அவரை காப்பாற்ற முயன்றபோது முடியவில்லை.
இது குறித்த தகவல் உடனடியாக ஆவடி தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயனைப்புத்துறையினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: போதைப் பொருள் விழிப்புணர்வு: தேனியில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் திரளாக பங்கேற்ற மாணவர்கள்! - cycle rally