ETV Bharat / state

தஞ்சையில் அதிமுக நிர்வாகியை காவல் ஆய்வாளர் தாக்கியதாக எஸ்பியிடம் புகார் - சிசிடிவி காட்சிகள் வைரல்! - ADMK Executive Beaten by Police - ADMK EXECUTIVE BEATEN BY POLICE

AIADMK Party Executive Beaten by Police: தஞ்சாவூரில் அதிமுக-பாமக தேர்தல் மோதல் தொடர்பாக, அதிமுக நிர்வாகி சண்முக ராஜேஷ்வரன் என்பவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது, பந்தநல்லூர் காவல் ஆய்வாளர், அவரை தாக்கியதாக சிசிடிவி காட்சிப் பதிவுகளுடன் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ADMK Party executive Beaten by Police Inspector CCTV Footage Viral in thanjavur

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 10:14 PM IST

ADMK Party executive Beaten by Police Inspector CCTV Footage Viral in thanjavur

தஞ்சாவூர்: கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற்ற முதல்கட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பந்தநல்லூர் காவல் சரகம், கோணுளாம்பள்ளம் வாக்குச்சாவடி எண் 2இல், அதிமுக முகவராக சண்முக ராஜேஸ்வரன் என்பவர் பணி செய்தபோது, அதே வாக்குச்சாவடியில் பாமக முகவராக பிரகாஷ் மற்றும் குமரன் ஆகியோர் சண்முக ராஜேஸ்வரனை தங்களது சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என மிரட்டல் விடுத்துக் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டு, சண்முக ராஜேஸ்வரன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றதாகவும், இதேபோல் அதிமுகவைச் சேர்ந்த உலகநாதன் என்பவரிடம் கூறியதால், அவருக்கும், பாமகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், பாமகவினர் உலகநாதனைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த சண்முக ராஜேஸ்வரன், காயமுற்ற உலகநாதனை மீட்டு, முதற்கட்டமாக கோணுளாம்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு, மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பாமகவினர் தங்களை அதிமுகவினர் தாக்கியதாகக் கூறி, பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து, சண்முக ராஜேஸ்வரன் தனக்குச் சொந்தமான குடோனில் இருந்த போது, அங்கு சென்ற பந்தநல்லூர் காவல் ஆய்வாளர் முத்துக்கிருஷ்ண ராஜா, "நீ என்ன பெரிய ரவுடியா?" என கேட்டு, சண்முக ராஜேஸ்வரனை தாக்கியபடி, அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த சூழலில், பந்தநல்லூர் காவல் ஆய்வாளர் முத்துக்கிருஷ்ண ராஜா, சண்முக ராஜேஸ்வரனைத் தாக்கியபடி அழைத்துச் செல்லும காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், தற்போது அந்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமல்லாது, அந்த சிசிடிவி காட்சியை முக்கிய ஆவணமாகக் கொண்டு, அதிமுக மற்றும் பாமக இடையே ஏற்பட்ட தேர்தல் தகராறு தொடர்பான வழக்கில், பந்தநல்லூர் காவல் ஆய்வாளர் முத்துக்கிருஷ்ண ராஜா, ஒருதலைபட்சமாக செயல்படுவதுடன், சண்முக ராஜேஸ்வரன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் இடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, காவல் ஆய்வாளர் தாக்கியதில் படுகாயம் அடைந்ததாகக் கூறப்படும் சண்முக ராஜேஸ்வரன், கும்பகோணத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மதுரையில் ஆர்.பி.உதயகுமார் கைது.. தனியார் உரத்தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.