ETV Bharat / state

குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவருக்கு மட்டும் தூய்மை பணியை வழங்கக் கோரிய மனுவைத் திருத்தம் செய்ய உத்தரவு! - Sanitation Workers Appoint Issue - SANITATION WORKERS APPOINT ISSUE

Sanitation Workers Appoint Case: தூய்மை பணியாளர்களாகக் குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த நபர்களை மட்டுமே நியமிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தூய்மை பணியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் கொடுங்கள் என எப்படி உத்தரவிடுவது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Sanitation Workers Appoint Case
Sanitation Workers Appoint Case
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 16, 2024, 8:07 PM IST

மதுரை: மதுரை, மானகிரியைச் சேர்ந்த செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாநகராட்சியின் 5 மண்டலங்களில், 1000 தூய்மை பணியாளர்கள் உள்ளனர் இவர்களில் பலர் நிரந்தரமாக பணியமர்த்தப்படவில்லை. நிதிப் பற்றாக்குறை என காரணம் காட்டி நிரந்தர பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிட்டது.

அத்தோடு மாநகராட்சிக்குச் சொந்தமான பொதுக் கழிப்பிடங்கள் பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டதோடு, தூய்மை பணியும் ஒப்பந்த அடிப்படையில் விடப்படுகின்றன. இதனால் துப்புரவுப் பணியாளர்கள் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

மேலும், கழிப்பிடங்களை நடத்தும் தனியார் அதிக லாபம் பெறும். அதேவேளையில், அதனைத் தூய்மை செய்யும் தூய்மை பணியாளர்கள் பொருளாதார நெருக்கடி நிலையிலேயே உள்ளனர். இது குறித்து நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலனில்லை.

ஆகவே, மதுரை மாநகராட்சியில் தனியாருக்குக் கொடுக்கப்பட்டுள்ள தூய்மை பணி ஒப்பந்தங்களை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். மேலும், தூய்மை பணியாற்றி வரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களைக் கொண்டு சுய உதவிக் குழுக்களை உருவாக்கி, தூய்மை பணி ஒப்பந்தங்களையும் மற்றும் கழிப்பிட பராமரிப்பு ஒப்பந்தங்களையும் அவர்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "தூய்மை பணியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் கொடுங்கள் என எப்படி உத்தரவிடுவது? அது ஜனநாயகத்துக்கு எதிரானது. ஆகவே, அவ்வாறு உத்தரவிட இயலாது." என கருத்து தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், மனுவில் கோரிக்கையைத் திருத்தம் செய்து தாக்கல் செய்வதாகவும், அதற்கு அவகாசம் வழங்கவும் கோரப்பட்டது. இதனை அடுத்து நீதிபதிகள், மனுதாரர் தனது கோரிக்கையைத் திருத்தி மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: நிர்மலா தேவி விவகாரம்: "பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்காமல் விசாரணை நடத்த முடியாது" - சென்னை உயர் நீதிமன்றம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.