சென்னை: சென்னை மேற்கு ஜாபர்கான்பேட்டை பகுதியில் நேற்றிரவு 8 மணி அளவில் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த பாண்டி (25) என்பவர், நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான காரை ஓட்டி சென்றுள்ளார். அப்போது வி.எம். பாலகிருஷ்ணா தெருவில் மதுபோதையில் சாலையில் படுத்திருந்த நபர் மீது பாண்டி காரை ஏற்றியுள்ளார்.இதில் பலத்த காயமடைந்த கூலி தொழிலாளி மஞ்சன் (55) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார், மஞ்சன் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுதொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த பாண்டி என்பவரை கைது செய்தனர். மேலும் நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான வாகனத்தை பறிமுதல் செய்து கிண்டி போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பாண்டி, நடிகை ரேகா நாயரின் கார் ஓட்டுநர் என்பதும், விபத்து ஏற்படுத்திய கார் ரேகா நாயரின் பெயரில் இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: பாஜக நிா்வாகியை அலுவலகம் புகுந்த வெட்டிய கும்பல்..இந்து மக்கள் கட்சி முன்னாள் நிர்வாகியிடம் தீவிர விசாரணை!