ETV Bharat / state

சென்னை நீச்சல் குளத்தில் சிறுவன் பலி.. தாய் கண் முன்னே நடந்த துயரம்! - chennai special child death - CHENNAI SPECIAL CHILD DEATH

boy drowned in a swimming pool: சென்னை கொளத்தூரில் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள சென்ற 10 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் மற்றும் கைதான இருவர்
சிறுவன் மற்றும் கைதான இருவர் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 5, 2024, 1:28 PM IST

சென்னை: சென்னை கொளத்தூர் அடுத்த விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினகுமார். திருச்சி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் தற்போது சென்னையில் குடும்பத்துடன் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி கீர்த்தி சபரீஸ்கர் என்ற 10 வயது மகன் இருந்தான்.

சிறப்பு குழந்தையான (special child) சபரீஸ்கருக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி நீச்சல் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதற்காக சென்னை கொளத்தூர் பெரியார் நகரில் உள்ள ப்ளூ சீல் (BLUE SEAL) என்கின்ற தனியாருக்கு சொந்தமான நீச்சல் குளம் பயிற்சி மையத்தில் இந்த சிறுவனுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் வழக்கம் போல் சிறுவனின் தந்தையும், தாயும் சிறுவனை அழைத்துக் கொண்டு நீச்சல் பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளனர். அங்குள்ள நீச்சல் குளத்தில் பயிற்சியாளர் சிறுவனுக்கு நீச்சல் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தார். இதற்கிடையே சிறுவனின் தந்தை நீச்சல் பயிற்சி மையத்தின் அருகே தனது காரில் அமர்ந்து கொண்டு அலுவல் பணிகளை தனது லேப்டாப்பில் செய்து வந்துள்ளார். தாய் ராணி நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் தனது பிள்ளையை அருகில் இருந்து கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது சிறுவன் நீரில் தத்தளித்துக் கொண்டு மூழ்கியபடி இருந்ததைக் கண்டு தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக பயிற்சியாளரிடம் சிறுவனின் தாய், மகன் நீரில் மூழ்குகிறான், என்னவென்று பார்க்கும் படி கூறியுள்ளார்.

அதற்கு அந்த பயிற்சியாளர், அப்படி இருந்தால்தான் நீச்சல் கற்றுக் கொள்ள முடியும் என்றும் நீங்கள் சற்று அமைதியாக இருங்கள் அவர் தானாக நீச்சல் பழகி மேலே வருவார் எனக் கூறியுள்ளார்.

ஒரு கட்டத்தில் சிறுவன் நீச்சல் குளத்தில் பேச்சு மூச்சு இல்லாமல் மிதந்தபடி இருந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாயார் ராணி அலறி அடித்தபடி ஓடி வந்து காரில் அலுவல் பணிகளை மேற்கொண்டு இருந்த தனது கணவரிடம் நடந்த விவரங்களை கூறியுள்ளார். இதனை அடுத்து சிறுவனின் தந்தையும் தாயும் உடனடியாக அவனை நீச்சல் குளத்தில் இருந்து மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அந்த சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாய் மற்றும் தந்தை அலறி அழுதபடி சம்பந்தப்பட்ட ப்ளூ சீல் நீச்சல் பயிற்சி மையத்திற்கு வந்துள்ளனர். நடந்த விவரம் குறித்து அங்கிருந்த நீச்சல் பயிற்சி மையத்தின் மேலாளர் மற்றும் பயிற்சியாளரிடம் நீச்சல் கற்றுத் தருவதாக கூறி எனது மகனை சாகடித்து விட்டீர்களே? எனக் கூறி கதறி அழுததாக தெரிகிறது.

இதனை அடுத்து சம்பவம் குறித்து கொளத்தூர் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் போலீசார் உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த கொளத்தூர் போலீசார் நீச்சல் பயிற்சி மையத்தின் உரிமையாளர் காட்வின் மற்றும் பயிற்சியாளர் அபிலாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வீட்டு கிணற்றில் இறங்கிய இருவர் உயிரிழப்பு.. விஷவாயு தாக்கி மரணமா? - தூத்துக்குடியில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.