ETV Bharat / state

பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு; 3 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கைது..24 பேர் மீது வழக்குப் பதிவு - Tiruvannamalai PM Awas Yojana scam - TIRUVANNAMALAI PM AWAS YOJANA SCAM

Scam in PM Awas Yojana: திருவண்ணாமலை அருகே பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட 24 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - PMAY Official website)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 1, 2024, 10:15 AM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் கடந்த 2017-18ஆம் ஆண்டு வந்தவாசி, ஜவ்வாது மலை ஒன்றியம் வீரப்பனூர் ஊராட்சி ஆகிய ஒன்றியங்களில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

சாதி கணக்கெடுப்பு 2011 பட்டியலில் இடப்பட்ட பயனாளிகளின் உண்மைத் தன்மை மற்றும் மேற்பார்வையின் போது குறிப்பாக 2017-18ஆம் ஆண்டுகளில் ஜவ்வாது மலைப்பகுதி வீரப்பனூர் ஊராட்சியில் தகுதியற்ற பயனாளிகளுக்கும், இறந்துவிட்ட பயனாளிகளுக்கும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஆணை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக லோக் ஆயுக்தாவில் அப்போதைய ஆரணி தொகுதி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த போது இந்த திட்டத்தில் முறைகேடு நடந்து இருப்பது உண்மை எனத் தெரியவந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி, திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி முறைகேடுகளில் ஈடுபட்டதாக அப்போதைய காலகட்டத்தில் பணியாற்றிய ஜவ்வாது மலை ஒன்றிய வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், வந்தவாசி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி, தெள்ளார் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பரணிதரன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என 24 நபர்கள் மீது திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் கடந்த ஜூன் 20 அன்று வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார்.

இந்த விசாரணையின் முடிவில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி, பரணிதரன் மற்றும் சீனிவாசன் உள்ளிட்ட மூவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என 21 அதிகாரிகள் இடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அதிகரித்து வரும் கல்லீரல் கொழுப்பு நோய்.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.