டெல்லி: கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, வர்த்தகம், தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனித்துவமான மற்றும் சிறப்பான சாதனைகள் அல்லது சேவைகளுக்காக மத்திய அரசின் சார்பில் பத்ம ஸ்ரீ, பத்மபூஷன் போன்ற விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு 34 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் கோவையைச் சேர்ந்த வள்ளி ஒயில் கும்மியாட்ட நடன ஆசிரியர் பத்ரப்பன் என்பவருக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
87 வயதான பத்ரப்பன் தனது நடனம் மூலம் இந்திய வரலாறு மற்றும் சமூகப் பிரச்சணைகளை எடுத்துரைத்தவர். கும்மி நடனத்தில் சிறந்து விளங்கியதற்காகவும் பெண்களுக்குச் சிறப்பான பயிற்சி அளித்ததற்காகவும் இவர் கவுரவிக்கப்படுகிறார். மேலும், தேர்வு பெற்றுள்ள 34 பேருக்குக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பத்ம ஸ்ரீ விருதை வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக் குறைவால் காலமானார்..