ETV Bharat / state

திருட்டு பைக்கில் செயின் பறித்த இளைஞர்கள்; மாவு கட்டு போட்டு சிறைக்கு அனுப்பிய போலீஸ்! - Karur Chain Snatching Case - KARUR CHAIN SNATCHING CASE

Chain Snatching Case: கரூரில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 2 நபர்கள் போலீசாரிடம் இருந்து தப்பித்து செல்ல முயற்சித்த போது, அவர்களுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் மாவு கட்டு போட்டு சிகிச்சை அளித்த பின், சிறையில் அடைக்கப்பட்டனர்.

Arrested People
கைதானவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 4:26 PM IST

கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள அம்மா புறவழி சாலையில், கடந்த 24 ஆம் தேதி, அதிகாலை 5 மணிக்கு காலைகடன் கழிக்க சென்ற முதியவரை அடித்து, அவரிடமி அவரது இருசக்கர வாகனத்தை பிடுங்கிச்சென்றனர். இது குறித்து முதியவர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டு அறைக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், கரூர் நகர் பகுதி முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

இச்சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்தில் கரூர் - ஈரோடு சாலை அமைந்துள்ள கோதை நகர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், தனியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் அணிந்திருந்த நகையை பறித்துக்கொண்டு, மர்ம நபர்கள் இருவர் தப்பித்துச்சென்றதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் சென்றது.

இந்த இரண்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் ஒருவராக இருக்க கூடும் என சந்தேகித்த போலீசார், இருவரையும் பிடிக்க கரூர் வெங்கமேடு, பசுபதிபாளையம், வாங்கல் போலீசாரை வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனைக் கண்ட மர்ம நபர்கள், போலீசாரிடமிருந்து பிடிபடாமல் இருக்க, வாகனத்தை எதிர் திசையில் வேகமாக திருப்பிச்சென்ற பொழுது விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கரூர் வெங்கமேட்டை சேர்ந்த பரணிபாண்டி (வயது 20) மற்றும் மோத்தீஸ் (25) என்பது தெரிய வந்தது. பின்னர், கரூர் நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வழிப்பறி செய்த பொருட்களை மீட்பதற்காக அழைத்துச்சென்ற பொழுது, போலீசாரிடமிருந்து தப்பி செல்ல முயற்சித்து, வெங்கமேடு அருகில் இருந்த பாலத்திலிருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர்களுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளித்த பின்னர், வழிபறி செய்த பொருட்கள் மீட்கப்பட்டு, அவர்களை போலீசார் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

கரூரில் கைதுக்கு பயந்து குற்றவாளிகள், சினிமா பாணியில் தப்பி ஓட முயற்சித்து, எலும்பு முறிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் மாவு கட்டு போட்டு, சிறைக்கு அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: கையே கருகி போச்சு.. பெண் மருத்துவர் உயிரை பறித்த லேப்டாப் சார்ஜர்.. சென்னையில் சோகம்! - Chennai WOMAN DOCTOR DEATH

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.