ஹைதராபாத்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், 2 போட்டிகள் தற்போது முடிவடைந்துள்ளன. இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் உள்ளது.
3வது டெஸ்ட் போட்டி, பிப்.15ஆம் தேதி குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், பிசிசிஐ மீதமுள்ள மூன்று போட்டிக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான மீதமுள்ள 3 போட்டிகளில் விராட் கோலி விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. முதல் 2 போட்டிகளிலும் தனது சொந்த காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்த விராட் கோலி, மீதமுள்ள 3 போட்டிகளில் இருந்தும் விலகி உள்ளார். இந்த முடிவை பிசிசிஐ மதிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்திய அணியில் விராட் கோலி இடம் பெற வில்லை. காயம் காரணமாக ஸ்ரேயஸ் ஐயரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி: ரோகித் சர்மா, ஜஸ்பிரிட் பும்ரா, யாஜஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் பட்டிதார், சர்ப்ராஸ்கான், ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல், அக்சர் பட்டேல், ரவிச்சந்திர அஸ்வின், துருவ் ஜுரல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்,
இதில், ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல் ஆகியோர் காயம் காரணமாக பிசிசிஐ மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதால், அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகே பங்கேற்பார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: "பாவம் அவரே கன்பியூசன் ஆகிட்டாரு.." டிஆர்எஸ் முடிவில் குழம்பிய நடுவர் - வைரலாகும் வீடியோ!