பாரீஸ்: நடப்பு பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு தொடரில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. அனைத்து பதக்கங்களும் துப்பாக்கிச் சுடுதல் மூலம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இதுவரை நடந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா கலவையான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறது.
Extremely humbled by the support and wishes that have been pouring in. This is something that I've always dreamt of. Proud to perform at the biggest stage for my country 🇮🇳 ❤️ pic.twitter.com/8U6sHOLulR
— Manu Bhaker🇮🇳 (@realmanubhaker) July 30, 2024
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்களின் சாதனைகள்:
1) மனு பாக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார். இதற்கு முன், ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் எந்த ஒரு இந்திய வீராங்கனையும் பதக்கம் வென்றதில்லை. மனு பாக்கர் மூன்றாவதாக வந்து பதக்கம் வென்றது மட்டுமல்லாமல், பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கப் பட்டியலில் இந்தியாவின் கணக்கைத் துவக்கி வைத்தார்.
2) 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு போட்டியில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது. இதன் மூலம் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றார். அதன் பின்னர் 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்து மனு பாக்கர் தோல்வியை தழுவினார். ஒரே ஒலிம்பிக்கில் மூன்று துப்பாக்கிச் சுடுதல் இறுதிப் போட்டியை எட்டிய முதல் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றார்.
3) ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்றார். 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் என்ற பெருமையை ஸ்வப்னில் குசலே பெற்றார்.
4) பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஒரே வீராங்கனையான அனுஷ் அகர்வால் குதிரையேற்றத்தில் வரலாறு படைத்து உள்ளார். ஒலிம்பிக்கில் குதிரையேற்றத்தில் பங்கேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அனுஷ் அகர்வால் பெற்றார்.
5) ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீரர் லக்சயா சென் பெற்றார். பாரீஸ் ஒலிம்பிக்கில் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
இதையும் படிங்க: ஒரே ஆளு 162 நாட்டோட தங்கப் பதக்கங்கள் க்ளோஸ்! யார் அவரு? - Paris Olympics 2024