பெங்களூரு: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தது இந்திய அணி. இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 10 விக்கெட் இழப்பிற்கு 402 ரன்கள் குவித்தது.இதனால் 356 ரன்கள் முன்னிலை பெற்றது நியூசிலாந்து. இதனை தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி. இதில் ஜெஸ்வால் 35ரன், கேப்டன் ரோகித் சர்மா 52, விராட் கோலி 70 ரன்களுக்கு விக்கெட் இழந்து வெளியேறினர்.
முதல் சதம்: இந்திய அணி சர்பராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில், சர்ஃபராஸ் கான் 110 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார். 96 ரன்கள் எடுத்திருந்த போது பவுண்டரி அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மெய்டன் சதம் விளாசினார்.
This celebration is hallmark of years of grit, determination, toil and patience. 🥹
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 19, 2024
- Sarfaraz Khan, you're a champion! ⭐pic.twitter.com/LMewWXypMW
இதன் மூலமாக ஒரே போட்டியில் டக் அவுட் மற்றும் சதம் அடித்து சாதனை படைத்தவர்களின் பட்டியலில் சர்ஃபராஸ் கான் இடம் பிடித்துள்ளார். இந்த போட்டியில் 195 பந்துகளை எதிர்கொண்ட அவர் 18 பவுண்டரி 3 சிக்ஸர்கள் உள்பட 150 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் விக்கெட் இழந்து வெளியேறினார்.
இதையும் படிங்க: மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி; நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதல்!
சாதனை படைத்த சர்பராஸ் கான்: முதல் தர கிரிக்கெட்டி முத்திரை பதித்தவர்களுக்கு மட்டுமே இந்திய அணியில் இடம் கிடைக்கும். ஆனால் சர்பராஸ் காரனுக்கு மட்டுமே ஏனோ அது உடனடியாக நடக்கவில்லை. காரணம் ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் 2019 மற்றும் 2020 காலகட்டத்தில் சீசனில் அவரது ஆவரேஜ் 150+ , 2021-22 சீசனில் அவருடைய ஆவரேஜ் 120+, 2022-23 சீசனில் அவருடைய ஆவரேஜ் 92. இப்படி இருந்தும் இந்திய அணிக்கான அந்த 3 ஆண்டுகளில் அவருக்கு வரவே இல்லை.
Cricket has a way of connecting us to our roots. Rachin Ravindra seems to have a special connection with Bengaluru, where his family hails from! Another century to his name.
— Sachin Tendulkar (@sachin_rt) October 19, 2024
And Sarfaraz Khan, what an occasion to score your first Test century, when India needed it most!… pic.twitter.com/ER8IN5xFA5
இதற்கு மேலும் சர்ப்ராஸை அணியில் எடுக்காமலிருந்தால் கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற சூழலில்தான், கடந்த பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 அரைசதங்களை அடித்திருந்தார்.
அதிலும் குறிப்பாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டி அவர் முதல் அரைசதம் விளாசிய போது அரங்கமே அவருக்கு கைகளை தட்டி உற்சாகப்படுத்தியது. நல்ல அறிமுகம். ஆனால், தடம் பதிக்கும் அளவுக்கான அறிமுகம் இல்லை. "இந்திய அணியில் எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் அப்போதும் இப்படி அரைசதத்தோடு நிறுத்திக் கொள்ளமாட்டேன். கண்டிப்பாகப் பெரிய இன்னிங்ஸை ஆடுவேன்" என்று சர்பராஸ் சபதமேற்றிருந்தார்.
அதனை பல மாதங்கள் கழித்து வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம் கிடைத்தாலும். அவரால் பிளேயிங் 11 இடம் பெறவில்லை. வங்கதேச தொடருக்கும் நியூசிலாந்து தொடருக்கும் இடையில் இராணி கோப்பை தொடர் நடந்திருந்தது. அதில் ஆட சென்று அங்கே ஒரு இரட்டைச் சதத்தை அடித்து வந்தார். இதன் மூலம், இரானி கோப்பையில் இரட்டை சதம் அடித்த முதல் மும்பை வீரர் என்ற பெருமையை சர்பராஸ் பெற்றார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் கூட சுப்மன் கில் விளையாடுவதாக இருந்தது. ஆனால் கில்லுக்கு கழுத்து வலி ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக சர்பராஸ் கான் களமிறக்கப்பட்டார். தனக்குக் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சதம் விளாசிய சர்பராஸ்க்கு பலரும் சச்சின் உள்ளிட்ட பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்