ETV Bharat / sports

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் கால்இறுதி: இந்திய வீராங்கனை ரித்திகா அதிர்ச்சி தோல்வி! - paris olympics 2024

பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் காலிறுதியில் இந்திய வீராங்கனை ரித்திகா ஹூடா தோல்வியை தழுவினார்.

Etv Bharat
Reetika Hooda (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 10, 2024, 5:04 PM IST

பிரான்ஸ்: பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 76 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ரித்திகா ஹூடா உலகின் தரவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையான கிரிகிஸ்தானின் ஐபெரி மெடெட் கைசியை எதிர்கொண்டார். போட்டி கடுமையாக இருந்த நிலையில் வெற்றிக்காக இரண்டு பேரும் மோதிக் கொண்டனர்.

வீணாக புள்ளிகள் இழப்பதை தவிர்க்க இருவரும் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டதால ஆட்டம் கடும் சுவாரஸ்யமாக நடைபெற்றது. இறுதியில் 1-க்கு 1 என்ற கணக்கில் போட்டி சமனில் முடிந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட டை பிரேக்கர் சுற்றில் கிர்கிஸ்தான் வீராங்கனை ஐபெரி மெடெட் கைசி வெற்றி பெற்றார்.

மேலும், 76 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவில் அவர் அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த தோல்வியின் மூலம் இந்திய வீராங்கனை ரித்திகா ஹூடா அரை இறுதி சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறினார். இதனால் மகளிர் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு இருந்த ஒரேயொரு பதக்க வாய்ப்பும் பறிபோனது.

இதையும் படிங்க: ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை ரித்திகா கால் இறுதிக்கு தகுதி! - paris olympics 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.