பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் விளையாட்டு தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி நாளை (ஆக.4) மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் கால் இறுதி போட்டியில் கிரேட் பிரிட்டன் (இங்கிலாந்து) அணியை எதிர்கொள்கிறது.
It's Knockout time and QF lineup is out, our boys will face Great Britain🇬🇧 for a place in Semi-Final at Paris, Olympics 2024.
— Hockey India (@TheHockeyIndia) August 3, 2024
Match starts at 1:30 PM (IST)
So set your timer and put on your India gear as the entire nation looks forward to this epic clash.💪#HockeyIndia… pic.twitter.com/B7lK3B7HCe
குரூப் பி பிரிவில் இடம் பெற்று உள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 3-க்கு 2 என்ற கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றது. ஏறத்தாழ 52 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய வீரர்கள் வரலாறு படைத்தனர்.
இந்நிலையில் நாளை இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, கிரேட் பிரிட்டனை எதிர்கொள்கிறது. பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி எப்படியாவது தங்க பதக்கம் வெல்லும் என ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணி தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெண்கலப் பதக்கமே கிடைத்தது. அதனால் இந்த முறை இந்திய வீரர்கள் எப்படியாவது தங்கம் வெல்ல வேண்டும் என ஒட்டுமொத்த இந்தியர்களும் ஆசை கொண்டு உள்ளனர்.
காலிறுதி ஆட்டம் எப்படி நடக்கிறது:
Breaking a 52-year spell, our Indian hockey team has triumphed over Australia at the #Olympics !
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) August 2, 2024
Their hard work & passion have brought glory to the nation.
Best of luck for the upcoming match—we’re all cheering for you!#Cheer4Bharat pic.twitter.com/BIeSUm0MEb
1.ஆகஸ்ட் 4 ஞாயிற்றுக்கிழமை, ஏ பிரிவில் முதலிடம் பிடித்த ஜெர்மனி, பி பிரிவில் நான்காவது இடத்தைப் பிடித்த அர்ஜென்டினாவை எதிர்த்து காலிறுதியில் விளையாடுகிறது.
2. அதேபோல் பி பிரிவில் முதலிடத்தில் உள்ள நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான பெல்ஜியம், ஏ பிரிவில் நான்காவது இடத்தில் உள்ள ஸ்பெயினுடன் மோதுகிறது.
3. ஏ பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள நெதர்லாந்து, காலிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
4. அதேபோல் பி பிரிவில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணி, ஏ பிரிவில் மூன்றாவது இடத்தில் உள்ள கிரேட் பிரிட்டன் அணியை எதிர்கொள்கிறது.
அரைஇறுதி ஆட்டம் எப்போது:
सरपंच साहाब तुस्सी कमाल करते हो!
— Hockey India (@TheHockeyIndia) August 2, 2024
Captain. Leader. India's Top-Scorer. 🏑
With 6⃣ Goals in 5⃣ matches, Harmanpreet Singh is currently one of the top scorers in the tournament trailing by just 1 goal to Blake Grovers from Australia.
Banking on his Goal-Scoring form for the… pic.twitter.com/xW7PJFdUwO
காலிறுதி ஆட்டங்களில் வெற்றி பெறும் அணிகள் முறையே ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறும் அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.
இதையும் படிங்க: தங்கப் பதக்கத்திற்கு பரிசு கல்யாண மோதிரம்! மேடையில் நடந்த க்யூட் புரபோசல்! - Paris Olympics 2024