டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி சொந்த நாடு திரும்பிய நிலையில், டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி விமான நிலையத்தின் முன் திரண்ட நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மற்றும் வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மேள தாளங்கள் முழங்க வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
#WATCH | India's #Bronze medal-winning Men's Hockey team players show their medals as they arrive in Delhi.#OlympicGames pic.twitter.com/0y7m1DlGSQ
— ANI (@ANI) August 13, 2024
முன்னதாக கடந்த சனிக்கிழமை இந்திய ஹாக்கி அணியின் முதல் பகுதி வீரர்கள் நாடு திரும்பிய நிலையில், மீதமுள்ளவர்கள் பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் கலந்து கொண்டு விட்டு இன்று நாடு திரும்பினர். நடப்பு பாரீஸ் ஒலிம்பிக் இந்திய ஹாக்கி அணியின் நாயகன் கேரளாவை சேர்ந்த கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், அபிஷேக் நயின், அமித் ரோகிதாஸ், சஞ்சய் உள்ளிட்ட வீரர்கள் இன்று நாடு திரும்பினர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், "நாங்கள் கடந்த முறையும் வெண்கலம் வென்றோம், இதை நாங்கள் வழக்கமாக வைத்துள்ளோம், ஓய்வு பெறுவது என்பது ஒரு பயணத்தின் முடிவு. ஆனால் ஒருவர் வெளியேறினால், பலர் வீரர்கள் உள்ளே வருவார்கள். என் அணி எனக்காக விளையாடியதில் மகிழ்ச்சி மற்றும் நான் பதக்கத்துடன் வெளியேறுகிறேன்" என்று தெரிவித்தார்.
#WATCH | Delhi: India's #Bronze medal-winning Men's Hockey team member PR Sreejesh says, " we won bronze the last time too, we've made this a habit..."
— ANI (@ANI) August 13, 2024
on his retirement, he says, "it's the end of a journey. but if one leaves, several others come in. happy that my team played for… pic.twitter.com/oAg8zw4ZTQ
முன்னதாக ஸ்பெயின் அணிக்கு எதிரான வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் மற்றும் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோரின் முக்கிய பங்களிப்புடன் இந்தியா 2-க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை உச்சி முகர்ந்தது. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ஆட்டத்தின் 30 மற்றும் 33வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்களை திருப்பி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
அதேபோல், ஆட்டத்தின் நிறைவு பகுதியில் ஸ்பெயின் வீரர்களின் கோல் முயற்சிகளை அதிரடியாக தடுத்து அணி வெண்கலப் பதக்கம் வெல்ல முக்கிய காரணியாக கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் அமைந்தார். 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற முனிச் ஒலிம்பிக் போட்டிக்கு பின்னர் இந்திய ஹாக்கி அடுத்தடுத்து ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக பதக்கம் வென்று சாதனை படைத்து இருப்பது குறிப்பிடத்தகக்து.
இதையும் படிங்க: பாராலிம்பிக் பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரமோத் பகத்துக்கு 18 மாதங்கள் தடை.. என்ன காரணம்? - pramod bhagat suspended 18 months