ETV Bharat / sports

மும்பையை தட்டி தூக்கிய தமிழ்நாடு லெவன்! சாய் கிஷோர், லக்சய் ஜெயின் அபாரம்! - Buchi Babu Cricket tournament

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 28, 2024, 7:38 PM IST

புச்சி பாபு கிரிக்கெட் தொடரின் முதல் இன்னிங்சில் மும்பை அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

Etv Bharat
Buchi Babu Cricket Tournament (Image Credit: X/@TNCACricket)

கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் அவினாசி சாலையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று (ஆக.27) தொடங்கிய ஆட்டத்தில் தமிழ்நாடு லெவன் அணி - மும்பை அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற தமிழ்நாடு லெவன் அணியின் கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதல் இன்னிங்சில் தமிழ்நாடு லெவன் அணி 117.3 ஓவர்களில் 379 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக தமிழ்நாடு லெவன் அணியில் பூபதி வைஷண குமார் 82 ரன்களும், பிரதோஷ் ரஞ்சன் பவுல் 65 ரன்கள், பாபா இந்திரஜித் 61 ரன்கள் குவித்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு சென்றனர்.

கடைசி கட்டத்தில் அஜித் ராம் அபாரமாக விளையாடி 53 ரன்கள் குவித்து அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். அஜித் ராமின் அபார ஆட்டத்தின் உதவியுடன் தமிழ்நாடு லெவன் அணி 117.3 ஓவர்களில் 379 ரன்கள் குவித்தது. தொடர்ந்து மும்பை அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது.

மும்பை அணியில் யாருடைய ஆட்டம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிதாக அமையவில்லை. தமிழ்நாடு லெவன் பவுலர்களின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து திணறினர். தொடக்க வீரர் முஷிர் கான் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனிடையே களமிறங்கிய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் தன் பங்குக்கு 30 ரன்கள் அடித்து கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் களமிறங்கிய வீரர்கள் யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அடுத்தடுத்து ஆட்டமிழந்து விக்கெட் அணிவகுப்பு நடத்தினர். இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 59.1 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் குவித்துள்ளது.

தொடக்க வீரர் திவ்யான்ஷ் சக்சேனா 61 ரன்களுடன் களத்தில் உள்ளார். கைவசம் இன்னும் 2 விக்கெட்டுகளே உள்ள நிலையில், மும்பை அணி 238 ரன்கள் பின்தங்கி உள்ளது. தமிழக அணி தரப்பில் கேப்டன் சாய் கிஷோர், லக்சய் ஜெயின் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், அஜித் ராம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து நாளை (ஆக.29) மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. மூன்றாவது நாளில் மும்பை வீரர்கள் ஆதிக்கம் செலுத்துவார்களா என்று பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: புச்சி பாபு கிரிக்கெட் தொடர்: தமிழ்நாடு லெவன் சீரான ஆட்டம்! மாற்றம் கொண்டு வருமா மும்பை? - Buchi Babu Cricket tournament 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.