லக்னோ: ஐபிஎல் தொடரின் 44வது போட்டி இன்று (ஏப்.27) லக்னோ எக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரரான குயிண்டன் டி காக் பெரிதாக சோபிக்கவில்லை. 2 ஃபோர்கள் மட்டும் அடித்த நிலையில், போல்ட் பந்து வீச்சில் போல்ட் ஆகி ஆட்டமிழந்து வெளியேறினார்.
கடந்த போட்டியில் 124 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்த ஸ்டோனிஸும், டக் சந்தீப் சர்மா பந்து வீச்சில் போல்ட் ஆனார். ஆனால், அதன்பின் வந்த தீபக் ஹூடா - கே.எல்.ராகுலுடன் சேர்ந்து பொறுப்புடன் ரன்களை சேர்த்தார்.
இந்த கூட்டணி சிறப்பாக விளையாட, சரிந்து கிடந்த லக்னோ அணியை இருவரும் தூக்கி நிறுத்தினர். கே.எல்.ராகுல் அரைசதம் விளாச, அவரைத் தொடர்ந்து தீபக் ஹூடாவும் அரைசதம் விளாசினார். ஆனால், அதன்பின் அஷ்வினை அட்டாக் செய்ய முயற்சி செய்து போவல் கையில் கேட்ச் கொடுத்து 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, நிகோலஸ் பூரான் 11, கே.எல்.ராகுல் 76 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. பதோனி 18 ரன்களுடனும், க்ருணால் பாண்டியா 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில், சந்தீப் சர்மா அதிகபட்சமாக 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.
இதையும் படிங்க: கடைசி வரை டஃப் பைட் கொடுத்த மும்பை! டெல்லி அணி திக்.. திக்.. வெற்றி! - IPL 2024 MI Vs DC Match Highlights