ETV Bharat / sports

ஐபிஎல் அணிகளில் இருந்து விலகும் 2 கேப்டன்கள்! யாரார் தெரியுமா?

கொல்கத்தா அணியில் இருந்து கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கழற்றிவிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம், லக்னோ அணியில் இருந்து கேப்டன் கே.எல் ராகுல் விலகியதாக தகவல் பரவி வருகிறது.

Etv Bharat
Reperesentational Image (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : 4 hours ago

ஐதராபாத்: 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் மே மாதங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக இந்த ஆண்டு இறுதியில் ஐபிஎல் மெகா ஏலத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மெகா ஏலத்தை முன்னிட்டு வீரர்கள் தக்கவைப்பு விதிமுறைகள் வெளியிடப்பட்ட நிலையில், அதிகபட்சம் ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்கவைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 10 அணிகளும் தக்கவைப்பு வீரர்கள் குறித்த பட்டியலை நாளை (அக்.31) வெளியிட ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு அணியும் வீரர்களை தக்கவைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஐபிஎல் சீசனில் கோப்பை வென்ற தந்தை கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரை கழற்றிவிட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

என்ன காரணம்?:

2014, 2016 ஆகிய ஆண்டுகளுக்கு பின் கொல்கத்தா அணி கடந்த ஐபிஎல் சீசனில் 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கொல்கத்தா அணியை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக வழிநடத்தி வெற்றியை பெற்றார். இவருக்கு உறுதுணையாக ஆலோசகர் கவுதம் கம்பீர், பயிற்சியாளர் சந்திரகாண்ட் பண்டிட் உள்ளிட்டோர் இருந்தனர்.

இந்த நிலையில் அடுத்த ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக சுனில் நரேன், ஆந்திரே ரஸ்செல், வருண் சக்கரவர்த்தி, ரிங்கு சிங், ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்சித் ராணா ஆகியோரை தக்கவைக்க கொல்கத்தா அணி நிர்வாகம் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஸ்ரேயாஸ் அய்யருக்கு ரூ.18 கோடி ஒப்பந்தம் அளிக்க முடியாது என்று அணி நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

கொல்கத்தா அணியில் இருந்து வெளியேற்றம்?:

சுனில் நரேன், ஆந்திரே ரஸ்செல் இருவருக்கும் ரூ.18 கோடியும், ரிங்கு சிங் மற்றும் வருண் சக்கரவர்த்திக்கு ரூ.14 கோடியும் ஒப்பந்தம் அளிக்கப்படவும், ஸ்ரேயாஸ் அய்யருக்கு ரூ.11 கோடி ஒப்பந்தம் அளிக்கவும் அணி நிர்வாகம் முன்வந்ததாக சொல்லப்படுகிறது. கொல்கத்தா அணியின் நம்பர் 1 ரீடென்ஷனான இருக்க வேண்டும் என்று விரும்பிய நிலையில் ஸ்ரேயாஸ் அய்யருக்கு அணி நிர்வாகத்தின் முடிவு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதைத் தொடர்ந்து கொல்கத்தா அணியின் சிஇஓ வெங்கி மைசூர் மற்றும் பயிற்சியாளர் சந்திரகாண்ட் பண்டிட் ஆகிய இருவரும் ஸ்ரேயாஸ் அய்யருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் முழு முடிவு எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஸ்ரேயாஸ் அய்யரை ரிலீஸ் செய்ய கொல்கத்தா திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

கே.எல்.ராகுல் விலகல்?:

அதேநேரம் கொல்கத்தா அணி மெகா ஏலத்தின் போது ஸ்ரேயாஸ் அய்யரை ஆர்டிஎம் விதிமுறையின் மூலம் தக்கவைக்க திட்டமிட்டு இருக்கலாம் எனத் தகவல் கூறப்படுகிறது. அதேபோல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இருந்தும் கேப்டன் கே.எல்.ராகுல் விலகியதாக தகவல் பரவி வருகிறது.

தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியிலான காரணங்களால் லக்னோ அணியில் இருந்து கே.எல்.ராகுல் விலகியதாக சொல்லப்படுகிறது. கடந்த சீசனில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி சிறப்பாக விளையாடவில்லை. இதனால் அணி நிர்வாகத்திற்கும், கே.எல்.ராகுலுக்கும் இடையே நீண்ட காலமாக பனிப் போர் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆர்டிஎம் என்றால் என்ன? அணிகள் எப்படி ஆர்டிஎம் விதியை பயன்படுத்த முடியும்? பண மழையில் நனையப் போவது யார்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.