ஹைதராபாத்: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடுமுழுவதும் பல்வேறு நகரங்களில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, நேற்றிரவு ஹைதராபாத்தில் 50 வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்தன.
இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தின் முதலாவதாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் - அபிஷேக் ஷர்மா ஆகியோர் தொடக்கத்திலேயே அபிஷேக் சர்மா 12 ரன்கள் எடுத்த நிலையில், இருவரும் சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த அன்மோல்பிரீத் சிங்கும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதைத்தொடர்ந்து, 3 வது விக்கெட்டுக்கு களமிறங்கிய நிதிஷ்குமார் ரெட்டி, டிராவிஸ் ஹெட்டுடன் சேர்ந்து பவர் பிளே ஆட்டத்தில், முதல் 6 ஓவர்களில் 37 ரன்களை குவித்தனர். இதையடுத்து களத்தில் இவ்விருவரின் கூட்டணியும், சுழற்பந்து வீச்சாளார் யுஸ்வேந்திர சாஹல் வீசிய பந்துகளை சிக்சர்களும், பவுண்டரிகளுமாக பறக்க விட்டனர். சாஹலுக்கு இது அவரது 300வது ஆட்டமாகும்.
பின்னர் 20 ஓவரின் முடிவில், டிராவிஸ் ஹெட் 44 பந்துகளில், 3 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் என 131 ஆக ஸ்கோரரை உயர்த்தியிருந்தார். இவரையடுத்து களமிறங்கிய விக்கெட் கீப்பரான ஹென்ரிச் கிளாசென் - நிதிஷ்குமாரின் கூட்டணி ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சமார்த்தியமாக ஆடியதால் ஸ்கோர் 200-ஐத் தாண்டியது. 20 ஓவர் முடிவில், ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை எடுத்திருந்தது.
பின்னர், 202 ரன்கள் எடுத்தால் இலக்கு என ஹைதராபாத் அணி சொந்த மண்ணில் வெற்றியைப் பெற வேண்டும் என உற்சாகத்தோடு களமிறங்கியது. வேகப்பந்து வீச்சளார் புவனேஷ்குமார் வீசிய பந்துகளில் இம்பேக்ட் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் (0), கேப்டன் சஞ்சு சாம்சுன் (0) என இருவருமே ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தனர்.
பின்னர் அடுத்தடுத்து களமிறங்கிய ஜெய்ஸ்வால் 40 பந்துகளில், 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 67 ரன்கள் எனக் குவித்தார். அடுத்தடுத்த ஓவர்களில் ரியான் பராக் 49 பந்துகளில், 8 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என 77 ரன்களை குவித்தார். இறுதி ஓவரில், வெற்றி பெற 13ரன்கள் தேவை என இருந்த சூழ்நிலையில், புவனேஷ்வர் குமார் வீசிய பந்தில், 11 ரன்கள் எடுத்தனர்.
பின்னர், கடைசி 2 பந்தில் 2 ரன்கள் என எடுக்க வேண்டிய கட்டத்தில், ஸ்டேடியம் முழுக்க ரசிகர்களின் கூச்சல் எகிறிக்கொண்டிருந்தது. அப்போது,புல்டாஸாக வந்த கடைசி பந்தை ரோமன் பவெல் (27) எல்பிடபிள்யூ ஆக்கினார். இதனால், ஒரு ரன் வித்தியாசத்தில் 20 ஓவர் விக்கெட்டில், ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களே எடுத்து த்ரில்லான வெற்றி பெற்றது.
இதனால், சொந்தமண்ணில் ஹைதராபாத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை சுவைத்தது. நடப்பு ஐபிஎல்லில் ராஜஸ்தானிற்கு இது 2வது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஹைதராபாத் அணிக்கு ஐபிஎல்லில் இது 6 வெற்றியாகும். இந்த நிலையில்,
இதையும் படிங்க: ராஜஸ்தான் அணிக்கு எமனாக நின்ற நிதிஷ் ரெட்டி.. 202 ரன்கள் இலக்காக நிர்ணயம்! - Srh Vs RR