பெங்களூரு: நாடெங்கும் உள்ள பல கிரிக்கெட் மைதானங்களில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியை, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி எதிர்கொண்டது. முன்னாள் சாம்பியன்ஸ் ஆன ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் வீரர்கள் வெற்றிக்காக தங்களது முழுமுயற்சியில் தீவிரமாக விளையாடினர்.
அதன்படி, ஆட்டத்தின் 20 ஓவர் முடிவில், ஹைதராபாத் அணி 287 ரன்களை குவித்து சாதனை படைத்திருந்தனர். 2008ஆம் ஆண்டு முதல் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 6 முறை 250 ரன்களுக்கும் அதிகமாக குவிக்கப்பட்டுள்ளன. அதிலும், நடப்பு சீசனில் 4 முறை இது நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்த 30வது லீக் ஆட்டத்தில், ஹைதராபாத் அணி 287 ரன்களை குவித்த நிலையில், இது ஏற்கனவே, மும்பை இந்தியஸ் அணிக்கு எதிராக விளையாடிய இதே ஹைதராபாத் அணி எடுத்திருந்த 277 ரன்கள் என்ற சாதனையை இப்போட்டியில் முறியடித்துள்ளது. சொந்த மைதானமாக இருந்தாலும் அசராமல் விளையாடிய பெங்களூரு அணி தனக்கு நிர்ணயிக்கப்பட்ட ஸ்கோருக்காக விடா முயற்சியாக போராடியது.
இதற்கிடையே, சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்களை எடுத்திருந்தது. பெங்களூரு அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட இந்த இமாலய இலக்கை அடைய அந்த அணியில் இடம் பெற்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 85 ரன்கள் என அடித்து அணியின் ஸ்கோரை அதிகரிக்க பெரும்பங்காற்றியுள்ளார். 23 பந்துகளிலேயே தனது அரைசதத்தை பதிவு செய்தார். ஆறாவது விக்கெட்டாக பேட்டிங்க் இறங்கினாலும், மனம் தளராமல் சாமர்த்தியமாக விளையாடியை தினேஷ் கார்த்திக் அடித்த பந்துகள் சிக்ஸ்சர்கள், பவுன்டரிகள் என ரன்களை அதிகரித்தன.
முன்னதாக, இந்த போட்டியில், இரண்டு அணிகளும் மொத்தமாக 38 சிக்ஸர்களை அடித்து இருந்தன. இந்நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கிளாசன் 106 மீட்டர் உயரத்தில் அடித்த சிக்ஸர் அடித்திருந்த நிலையில், இதே போட்டியில் தினேஷ் கார்த்திக் 108 மீட்டர் உயரத்தில் சிக்ஸர் அடித்து பந்தை பறக்க விட்டார். இதனால், பந்து மைதானத்தின் கூரையைத் தொட்டுவிட்டு மீண்டும் மைதானத்திற்குள் வந்து விழுந்தது.
இதன் மூலம், ஒரே போட்டியில் அடித்த மிக உயரமான சிக்ஸர் என்ற சாதனையை தினேஷ் கார்த்திக் முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ஆட்டத்தின் முடிவில் 5 பவுன்டரி, 7 சிக்ஸ்சர்கள் என அடித்திருந்த நிலையில், 19வது ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐபிஎல்:25 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அசத்தலான வெற்றி! புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் பெங்களூரு அணி - IPL 2024 RCB Vs SRH