ETV Bharat / sports

ஐபிஎல் 2024; டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு! - lsg vs pk - LSG VS PK

LSG Vs PK: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் 2024
IPL 2024
author img

By PTI

Published : Mar 30, 2024, 7:43 PM IST

லக்னோ: 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 போட்டிகள் நடைபெற்ற நிலையில், இன்று (மார்ச் 30) தொடரின் 11வது போட்டி லக்னோவின் எக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன. டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதுவரை இத்தொடரில் பெங்களூரு அணி 3 போட்டிகளும், லக்னோ அணியை தவிர்த்து மற்ற அணிகள் அனைத்தும் 2 போட்டிகள் விளையாடி உள்ளது.

லக்னோ அணி கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்ட நிலையில், அதில் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இன்று நடைபெற்று வரும் போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்றால், புள்ளிப் பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது.

அதனால் வெற்றி முனைப்புடன் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான லக்னோ அணி களம் இறங்கி உள்ளது. அதேநேரம், பஞ்சாப் அணி இதுவரை இரண்டு போட்டிகள் விளையாடி உள்ளது. அதில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று 5வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல், ஆயுஷ் படோனி, நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், மயங்க் யாதவ், மணிமாறன் சித்தார்த்.

பஞ்சாப் கிங்ஸ் அணி: ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

இதையும் படிங்க: கோலியின் அதிரடியில் பெங்களூரு அணி 182 ரன்கள் குவிப்பு.. கொல்கத்தா அதிரடி தொடக்கம்! - KKR Vs RCB

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.