பெங்களூரு: நடப்பு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 15 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று (ஏப்.2) தொடரின் 16வது லீக் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், இப்போட்டிக்கான டாஸ் வீசப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் சேஸிங் செய்த 1 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் பேட்டிங் பலமாக காணப்பட்டாலும், விராட் கோலியை தவிர்த்து பிரதான வீரர்களான டு பிளெசிஸ், கேமரூன் கிரீன் ஆகியோர் பெரிதாக சோபிக்கவில்லை. குறிப்பாக அந்த அணியின் பந்து வீச்சின் செயல்பாடு மிகவும் மோசமாகவே உள்ளது. இன்றைய போட்டியில் மாற்று வீரராக ரீஸ் டாப்லி களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் அல்சாரி ஜோசப்பிற்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் லக்னோ அணியை பொருத்தவரையில் அவர்கள் விளையாடிய 2 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களது அணியிலும் பேட்டிங்கில் கே.எல்.ராகுல், நிகோலஸ் பூரனை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் ஏதும் எடுக்கவில்லை. கடந்த போட்டியில் யாஷ் தாக்கூருக்கு பதிலாக மணிமாறன் சித்தார்த் சேர்க்கப்பட்ட நிலையில், இன்றைய போட்டியில் யாஷ் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரர்களாக டி காக் மற்றும் கே.எல்.ராகுல் விளையாடி வருகின்றனர்.
இரு அணிகளுக்கான பிளேயிங் 11
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி: குயின்டன் டி காக் (விகீ), KL ராகுல் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், நவீன்-உல்-ஹக், மயங்க் யாதவ்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் (விகீ), மயங்க் டாகர், ரீஸ் டாப்லி, முகமது சிராஜ், யாஷ் தயாள்.
இதையும் படிங்க: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்! என்ன காரணம்? - Ben Stokes Ruled Out T20 World Cup