ஐதராபத்: மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 3ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.
மொத்தம் 23 ஆட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் அனைத்து போட்டிகளும் துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறுகின்றன. இந்நிலையில், 20 ஓவர் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன் பிரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிரிதி மந்தனா துணை கேப்டனாகவும் இந்திய அணியை வழிநடத்துவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்கெட் கீப்பர் யாஸ்திகா பாட்டியா, ஸ்ரேயங்கா பாட்டீல் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். அவர்களின் உடல் தகுதியை பொறுத்து அணியில் தொடர்வார்களா என்பது முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தவிர்த்து ராஜேஸ்வரி கெய்க்வாட், ஷீகா பாண்டே ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதில் ஷிகா பாண்டே தற்போது மகளிருக்கான கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். அவர் இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. நேற்று 20 ஓவர் மகளிர் உலக கோப்பை தொடருக்கான திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டது.
🚨 NEWS 🚨
— BCCI Women (@BCCIWomen) August 27, 2024
Presenting #TeamIndia's squad for the ICC Women's T20 World Cup 2024 🙌 #T20WorldCup pic.twitter.com/KetQXVsVLX
அதில் இந்திய மகளிர் அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் அக்டோபர் 4ஆம் தேதி துபாயில் வைத்து நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து அக்டோபர் 6ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் நடைபெறுகிறது. போட்டி அட்டவணை வெளியான மறுநாளில் இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
20 ஓவர் மகளிர் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (விக்கெட் கீப்பர்), ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல், சஜனா சஜீவன்
ரிசர்வ் வீராங்கனைகள்: உமா செத்ரி (விக்கெட் கீப்பர்), தனுஜா கன்வர், சைமா தாகூர்
இதையும் படிங்க: அக்.6ல் இந்தியா - பாகிஸ்தான் மோதல்! மகளிர் டி20 உலக கோப்பை அட்டவணை வெளியீடு! - Womens T20 World Cup 2024