பார்படாஸ்: டி20 உலகக் கோப்பை தொடர் கடந்த ஜூன் 1ஆம் தேதி அமெரிக்கா, மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பார்படாஸில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன. பார்படாஸில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால் இன்றும் மோசமான வானிலை நிலவுவதால் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🇿🇦 🆚 🇮🇳, #T20WorldCup 2024 Final, it doesn't get any better 🤩
— T20 World Cup (@T20WorldCup) June 29, 2024
Rohit Sharma wins the toss and elects to bat first in Barbados.#SAvIND | 📝: https://t.co/V0QV3fD6DZ pic.twitter.com/SEDe80tJ75
இரு அணிகளுமே இந்த தொடரில் ஒரு தோல்விக்கூட அடையாமல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சூப்பர் 8 சுற்றில் குரூப் 1ல் இருந்து இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும், குரூப் 2ல் இருந்து இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் அரையிறுதிக்குள் நுழைந்தன.
முதல் அரையிறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தானை வென்று தென் ஆப்பிரிக்கா அணியும், இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்தை வென்று இந்திய அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனிடையே இன்று தொடங்கவுள்ள இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
A showdown between two stunning batting units 💪
— T20 World Cup (@T20WorldCup) June 29, 2024
Who will come out on top in the final? 🇿🇦 🇮🇳#SAvIND #T20WorldCup pic.twitter.com/PdrHF7AlL6
இன்றைய போட்டியில் விளையாடும் டீம் லெவன்:
இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா , ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஸ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா.
தென் ஆப்பிரிக்க அணி: டி காக் (விக்கெட் கீப்பர்), ஹெண்டிரிக்ஸ், எய்டன் மார்க்ரம் (கேப்டன்), கிளாசன், டேவிட் மில்லர், ஸ்டப்ஸ், மார்க்கோ யான்சன், கேசவ் மஹாராஜ், ரபாடா, நோக்கியா, சம்ஸி.
இதையும் படிங்க: இந்தியா VS தென்னாப்பிரிக்கா..புதிய வரலாறு படைக்க போவது யார்? - T20 World cup