ETV Bharat / sports

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி: ஜெய்ஸ்வால் சதம்.. வலுவான முன்னிலையில் இந்திய அணி..! - Yashasvi Jaiswal

India vs England: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்து 322 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி
இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 6:06 PM IST

ராஜ்கோட்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகின்றது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் நேற்று முன்தினம் (பிப்.15) குஜராத் மாநிலம் ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி, களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 445 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும், சஃப்ராஸ் கான் 62 ரன்களும் எடுத்தனர். அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்று (பிப்.16) அதாவது 2ஆம் நாள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர் பென் டக்கெட் 133 ரன்களுடனும், ஜோ ரூட் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று (பிப்.17) போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியது. பேட்டிங்கை தொடர்ந்த இங்கிலாந்து அணி சற்று தடுமாற்றத்தைச் சந்தித்தது. ஜோ ரூட் 18, ஜானி பேர்ஸ்டோவ் 0, பென் ஃபோக்ஸ் 13 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடக்க முதல் சிறப்பாக விளையாடிய பென் டக்கெட் 153 ரன்கள் விளாசிய நிலையில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்களும், குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்களும் கைப்பற்றினர்.

இதையடுத்து, 126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியுள்ளது. ரோகித் சர்மா 19 ரன்களிலும், ராஜட் பட்டிதர் 0 ரன்னுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர். சிறப்பாக விளையாடிய சதம் அடித்த ஜெய்ஸ்வால் முதுகு வலியின் காரணமாக 104 ரன்களுடன் ஓய்வு பெற்றார்(Retired hurt). 3வது நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்து 322 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இதையும் படிங்க: தோள்பட்டையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்… காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.