ETV Bharat / sports

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி! - IND VS BAN 2ND T20I

வங்கதேசத்திற்கு எதிரான 2வது டி20 போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ள இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியது.

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் சஞ்சு சாம்சன் மற்றும் வருண் சக்கரவர்த்தி
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் சஞ்சு சாம்சன் மற்றும் வருண் சக்கரவர்த்தி (Credits - ap)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2024, 9:20 PM IST

டெல்லி: இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் குவாலியரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரவு 7 மணிக்கு தொடங்கி இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இதில் சஞ்சு சாம்சன் 10 ரன்னுக்கும், 3 பவுண்டரியை துரத்திய அபிஷேக் சர்மா15 ரன்னுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து வந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் 8 ரன்னுக்கு அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதன் பின்னர் 4வது விக்கெட்டிற்கு நிதிஷ் ரெட்டி - ரிங்கு சிங் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.

இதையும் படிங்க: 147 ஆண்டுகால விம்பிள்டன் டென்னிசில் மிகப்பெரிய மாற்றம்! இனி இவங்கள பார்க்கவே முடியாதா!

இருவரும் இணைந்து வங்கதேச பந்து வீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் 34 பந்துகளில் 7 சிக்ஸர், 4 பவுண்டரி என 74 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து 5 பவுண்டரி 3 சிக்ஸர்கள் விளாசிய ரிங்கு சிங் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இதன் பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டிய 32 ரன்களும், ரியான் பராக் 15 ரன்களும் விளாச இந்திய அணி 200 ரன்களை கடந்தது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 221 ரன்களை குவித்தது. வங்கதேச அணி தரப்பில் அகமத், ஷகிப் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து 222 ரன்கள் அடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி வகளமிறங்கிய வங்கதேச அணி, இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

20 ஓவர்கள் 9 விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம் அணி 135 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி அக்.12 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.