பல்லேகலே: இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜூலை 30) பல்லேகலே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. 2வது ஓவரில் ஜெய்ஸ்வால் தீக்ஷனா வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், சூர்யகுமார் யாதவ் ஆகிய 3 வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.
Innings Break!#TeamIndia post 137/9 in the first innings.
— BCCI (@BCCI) July 30, 2024
Sri Lanka innings coming up shortly.
Scorecard ▶️ https://t.co/UYBWDRgtyR#SLvIND pic.twitter.com/OZqmzBrXPn
பின்னர் களத்தில் சுப்மன் கில் உடன் ஷிவம் துபே கைகோர்க்க அவரும் பெரிதாக ரன் குவிக்கவில்லை. சுப்மன் கில்லுக்கு பார்ட்னர் அமையாமல் திகைத்து நிற்க, ரியான் பராக் கைகோர்த்தார். இருவரும் நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களைக் குவிக்க ஆரம்பித்தனர். 13 ஓவர் முடிவிற்கு 81- 5 என்ற கணக்கில் இந்திய அணி விளையாடியது.
ரியான் பராக் சிக்ஸ் மற்றும் பவுண்டரிகளை மாறி மாறி விளாச இருவரின் பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்கள் குவிந்தன. இந்நிலையில், ஹசரங்க வீசிய பந்து ஸ்டெம்பில் பட சுப்மன் கில் அவுட் ஆனார். பின்னர், அதே ஓவரில் பார்டனர் ரியான் பராக் ஆட்டமிழந்தார்.
களத்தில் ரவி பிஷ்னோய் - வாஷிங்டன் சுந்தர் ஜோடி ஆட்டத்தை எதிர்கொண்டனர். வாஷிங்டன் சுந்தரும் 25 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் முகமது சிராஜ் களம் கண்டார். அதன்படி, 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 137 ரன்கள் எடுத்தது.
இந்த போட்டியில் இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 39 ரன்களையும், ரியான் பராக் 26 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 25 ரன்களையும் எடுத்தனர். இலங்கை அணியில் தீக்ஷனா 3 விக்கெட்டுகளையும், ஹசரங்க 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி: அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி! காலிறுதிக்கு தகுதி? - Paris Olympics 2024