ஹராரே: இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 தொடர் இன்று ஹராரே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யாஸ்வி ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது.
Innings Break!
— BCCI (@BCCI) July 10, 2024
Captain @ShubmanGill top-scores with 66(49) as #TeamIndia post 182/4 in the first innings 💪
Over to our bowlers 🙌
Scorecard ▶️ https://t.co/FiBMpdYQbc#ZIMvIND pic.twitter.com/6q46FzzkgP
முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் இரு பவுண்டரிகள், ஒரு சிக்ஸ் விளாசி அசத்தினார். இதே போல் 2வது ஓவரிலும், சுப்மன் கில் இரு பவுண்டரிகள், சிக்ஸ் விளாசி அணிக்கு ரன்களைக் குவித்தார். இருவரும் சிக்ஸ், பவுண்டரி என சிறப்பாக விளையாடினர். 5 ஓவர்கள் முடிவிற்கு இருவரின் பார்ட்னர்ஷிப்பில் இந்திய அணிக்கு 50 ரன்கள் குவிந்தன. ராசா வீசிய பந்தைச் சமாளிக்க முடியாமல் ஜெய்ஸ்வால் அவுட் ஆக, அபிஷேக் ஷர்மா களம் கண்டு வெறும் 10 ரன்களுக்கு அவுட் ஆனார்.
பின்னர், ருதுராஜ் கெய்க்வாட் களம் கண்டார். ருதுராஜ் - சுப்மன் கில் கூட்டணி நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களைக் குவிக்க, சுப்மன் கில் 14வது ஓவரில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். 15 ஓவர் முடிவிற்கு 127-2 என்ற கணக்கில் இந்திய அணி விளையாட, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்ஸ் என மாறி மாறி இருவரும் விளாசி இந்திய அணிக்கு ரன்களைக் குவித்தனர்.
1⃣0⃣0⃣ up for #TeamIndia! 👏 👏
— BCCI (@BCCI) July 10, 2024
5⃣0⃣ up for captain Shubman Gill - his 2nd in T20Is 👌 👌
Follow the Match ▶️ https://t.co/FiBMpdYQbc#ZIMvIND pic.twitter.com/4g0BllPGFC
இந்நிலையில், முசரபானி வீசிய பந்தில் சுப்மன் கில் 66 ரன்களுக்கு அவுட் ஆக, சஞ்சு சாம்சன் களம் கண்டார். ருதுராஜ் அரை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களுக்கு போராடி ஆட்டமிந்தார். 20 ஓவர்கள் முடிவிற்கு 182 ரன்களை இந்திய அணி குவித்தது. இப்போட்டியில் இந்திய அணியில் சுப்மன் கில் 66 ரன்களும், ருதுராஜ் 49 ரன்களும் குவித்தனர். ஜிம்பாப்வே அணி ராசா, முசரபானி ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
இதையும் படிங்க: இந்திய அணியை வழிநடத்தும் கவுதம் கம்பீர்.. இதுவரை செய்த சாதனைகள் என்ன? - GAUTAM GAMBHIR INDIA HEAD COACH