டெல்லி: இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்த தனது முடிவை அறிவித்துள்ளார். ஜூன் 6ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் குவைத் அணிக்கு எதிரான பிபா கால்பந்து தகுதி போட்டியுடன் சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வீடியோ ஒன்றை சுனில் சேத்ரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "தான் ஒருபோதும் மறக்க முடியாத நாள் ஒன்று இருப்பதாக்வும் அதை நாட்டுக்காக முதன் முதலில் விளையாடிய நாளை நினைவு கூறுவதாகவும் சுனில் சேத்ரி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
தபனது முதல் பயிற்சியாளர் சுகி உள்ளிட்டோர் குறித்து அந்த வீடியோவில் பகிர்ந்துள்ள சுனில் சேத்ரி தனது முதல் ஜெர்சி, முதல் கோல் என ஒவ்வொன்றையும் தனித் தனியாக விவரித்து உள்ளார். தனது கால்பந்து அனுபவங்கள் குறித்து ஏறத்தாழ 10 நிமிடங்களுக்கு வீடியோவாக பேசி சுனில் சேத்ரி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
39 வயதான சுனில் சேத்ரி கடந்த 20 ஆண்டுகளாக இந்திய அணிக்காக தொடர்ந்து கால்பந்து விளையாடி வருகிறார். இதுவரை 145 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி 93 கோல்கள் போட்டுள்ளார். வரும் ஜூன் 6ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடைபெறும் குவைத் அணிக்கு எதிரன பிபா உலக கோப்பை கால்பந்து தொடரின் தகுதிச் சுற்று ஆட்டத்துடன் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2024 பெடரேசன் கோப்பை: ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்! - Neeraj Chopra